Vijay Surya...

people

Contributor
Joined
25 May 2012
Messages
6,653
Reaction score
5,051
விஜய்யா, அஜித்தா | யார் உண்மையிலேயே மாஸ் ? 2003 லிருந்து - 2015 வரை ஒரு அலசல் !

மங்காத்தா படத்திற்கு பிறகு அழுத்தமான ஒரு ஹிட் படத்தை அஜித் இன்னும் கொடுக்கவில்லை.
2007 ல் வெளியான பில்லா படத்திற்கு பிறகு அஜித் படம் எதுவும் 50 நாட்கள் கடந்து ஓடியது இல்லை.
இது வரை அஜித் கேரியரில் பார்த்தால்“என்ன நடித்தாலும் ஹிட்டு" என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை.
விஜய், சூர்யா போன்று அஜித் இதுவரை தொடர் வெற்றிகளையும் கொடுத்ததும் இல்லை.

இப்போது சமீபகாலமாக இணையதளத்திலும் பத்திரிகைகளிலும் அஜித்துக்கும், விஜய்க்கும் அபரிமிதமான செல்வாக்கு இருப்பது போல் காட்டப்படுகிறது. அது நிஜமாகவும் இருக்கலாம். ஆனால் இப்போது இவர்களுக்கு வந்திருக்கும் இந்த திடீர் செல்வாக்கு ரஜினி, எம்.ஜி.ஆர் போல் ‘திரையில் முகம் காட்டினாலே படம் ஓடிவிடும்' என்பது போன்ற செல்வாக்கா? - ஒரு மிகச்சிறிய எனக்குத்தெரிந்த விதத்தில் விஜய் - அஜித்தின் செல்வாக்கை அணுகியிருக்கிறேன்.

சுமார் 11 வருடங்களுக்கு முன், அதாவது அஜித்தின் ஜனா என்கிற படம் ரிலீசான ஏப்ரல் 17, 2004, விஜய்யின் கில்லி ரிலீசான ஏப்ரல் 14, 2004ம் நாளில் இருந்து ஆரம்பிப்போம். வில்லன் என்கிற வெற்றிப் படத்துக்குப் பிறகு கார் ரேஸ் மோகத்தில், அதில் சாதிக்க வேண்டும் என்கிற வெறியில் சினிமாவை கொஞ்ச காலம் மறந்து இருந்தார் அஜித். ரசிகர்களின் வற்புறுத்தலுக்காகவும் தன் கார் ரேஸ் செலவுக்காகவும் சரியா கதையை தேர்ந்தெடுக்காமல், ‘ஆஞ்சனேயா', ‘ஜனா' என்று வரிசையாக சறுக்க ஆரம்பித்தார். வில்லன் படம் கொடுத்த வெற்றியை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இந்த நேரத்தில் வசீகரா, பகவதி என்று சுமாரான படங்கள் கொடுத்துக்கொண்டிருந்த விஜய் ‘திருமலை' என்று ஒரு மாஸ் ஹிட் கொடுத்தார். தொடர்ந்து 4 படங்கள் 100நாட்களை கடந்து ஓடின (ப்ரண்ட்ஸ் - 175 நாள், ப்ரியமானவளே - 125 நாள், குஷி - 150 நாள், பத்ரி - 100 நாள்). அதற்குப் பின் தான் விஜய் சறுக்க ஆரம்பித்தார் வசீகரா, தமிழன், புதிய கீதை என்று.

கட்டாய வெற்றி தேவை என்கிற சூழலில் அவருக்கு இயக்குனர் ரமணா மூலம் அமைந்தது திருமலை வெற்றி. திருமலை ரிலீஸ் ஆன அதே நாளில் வந்தது தான் ஆஞ்சநேயா. அப்போது அஜீத்தின் பேட்டிகளும் மிகவும் ‘திமிரா'க இருக்கும். "நான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார்", "எனக்கு சினிமாவ விட ரேஸ் தான் முக்கியம்" என்று மனதில் பட்டதை எல்லாம் சொல்லி செமத்தியாக தன் இமேஜை கெடுத்துக்கொண்டார். இது நடந்தது 2003 தீபாவளியில். பின் 2004 சித்திரையில் தான் அந்த மாபெரும் வெற்றியும் படு மோசமானா தோல்வியும் நடந்தன. விஜய்க்கு கில்லி, அஜித்துக்கு ஜனா. "ஜனா - the power machine னு பேர் வச்சதுக்கு பதிலா, ஜனா - the xerox machineனு வச்சிருக்கலாம்" என்று ஒரு பத்திரிகை ஓபனாகவே அசிங்கப்படுத்தியது. எல்லா சேனல் பத்திரிகைகளில் விஜய் பேட்டி, கில்லி டீம் பேட்டி என்று களைகட்ட ஆரம்பித்தது. அஜித்தை சீண்டுவாரில்லை. அதே வருடத்தில் விஜய்க்கு உதயா என்றொரு ஃப்ளாப் வந்தாலும், கில்லியின் வெற்றி அதை மறைத்துவிட்டது. வருட கடைசியில் ‘மதுர' படம் வந்து ரசிகர்களை திருப்திப்படுத்தி வெற்றியும் பெற்றது. ஆனால் அஜித்துக்கு அந்த வருட தீபாவளிக்கு வந்த ‘அட்டகாசம்' ரசிகர்களை கூட சற்று ஏமாற்றிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் தான் விஜய்க்கு என்று ஒரு மாஸ் உருவானது. அவர் "என்ன நடித்தாலும் படம் ஹிட்" என்கிற பெயர் வந்தது. 2005ல் அவர் ஹீரோவாக நடித்து வெளிவந்த 3 படங்களும் (திருப்பாச்சி, சச்சின், சிவகாசி) வெற்றி பெற்றன. சச்சின் சுமாரான வெற்றி தான். ஏன்னா அது சந்திரமுகியோடு போட்டி போட்டது. அஜித் நடித்து அதே வருடம் மிகப்பெரும் எதிர்பார்ப்போடு வந்த “ஜீ" அட்டர் ஃப்ளாப் ஆனது. தொடர்ந்து இரண்டு வருடங்களாக அஜித்துக்கு ஒரு படம் கூட ஹிட் இல்லை. விஜய்க்கு கிட்டத்தட்ட அனைத்துப்படங்களும் ஹிட். விஜய் தான் "அடுத்த ரஜினி", "வசூல் மன்னன்" என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அஜித்துக்கு இருக்கும் “ஓப்பனிங் கிங்" என்கிற பட்டம் கூட ஆட்டம் காண ஆரம்பித்தது.

2006ல் இருவரும் தைப்பொங்கலில் பரமசிவன், ஆதி என்று மோதினார்கள். இரண்டு படங்களுமே தோல்வி என்றாலும், பரமசிவனை விட ஆதி நன்றாக ஓடியது. 2006ல் ஆதியே சறுக்கியதால் விஜய் அந்த வருடம் அடுத்து படம் நடிக்காமல் காத்திருந்தார். அஜித்துக்கு அதே வருடத்தில் வந்த "திருப்பதி" ஏ.வி.எம். என்கிற பேனர் தயாரித்த காரணத்தால் 100நாட்கள் ஓ(ட்)டப்பட்டது. வருமா? வராதா? என்று காக்கவைத்த ‘வரலாறு" தீபாவளிக்கு வந்து சக்கை போடு போட்டது. அந்த முறையும் அஜித் சறுக்கும் போது கே.எஸ். ரவிக்குமார் தான் வெற்றி கொடுத்து காப்பாற்றினார். ஆனால் அஜித்தால் இந்த வெற்றியையும் தக்க வைக்க முடியவில்லை. 2007 தைப்பொங்கலில் அஜித் 'ஆழ்வாராக' வந்து, வந்த சுவடே தெரியாமல் போய்விட்டார். விஜய் போக்கிரியாக வந்து ரெக்கார்ட் பிரேக் ஹிட் கொடுத்தார். அதே வருடம் வெளியான அஜித்தின் கிரீடமும் தோல்வியடைந்தது.

இந்த சூழலில் தான் சூர்யா வரிசையாக கஜினி, ஆறு, சில்லுனு ஒரு காதல், வேல் என்று வித்தியாசமான கதைகளில் நடித்து "விஜய்க்கு நான் தான் சரியான போட்டி" என்று வேகமாக முன்னேறினார். அஜித்தை அவர் ரசிகர்களைத் தவிர எல்லாரும் மறந்து விட்டார்கள். விஜய் மேலும் “ஒரே மாதிரி நடிக்கிறார்" என்கிற குற்றச்சாட்டும் வலுக்க ஆரம்பித்தது.
2007ல் பொங்கலுக்கு வந்த "வேல்" என்கிற ஒரே ஒரு படத்தில் நடித்தாலும் அந்த வருடம் முழுக்க தாங்குவது போன்ற ஹிட்டை கொடுத்தார் சூர்யா. விஜய் இரட்டை வேடத்தில் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் நடித்தார். விஜய்யின் “என்ன நடித்தாலும் ஓடும்" என்கிற பிம்பம் இந்த இடத்தில் தான் உடைய ஆரம்பித்தது. அஜித் வருடத்தின் முடிவில் "பில்லா" என்னும் பிளாக்பஸ்டர் கொடுத்து ஹாட்ரிக் ஃப்ளாப்பில் இருந்து தப்பித்துவிட்டார். ஆனால் விஜய் அழகிய தமிழ் மகன் என்கிற ஒரே படத்தின் மூலம் எஸ்.எம்.எஸ் ஜோக் வரை வம்புக்கு இழுக்கப்பட்டார்.

2008, 2009, 2010ல் வரிசையாக குருவி, வில்லு, சுறா என்று விஜய் அடுத்தடுத்து ஃப்ளாப்களை கொடுத்தார், அதுவும் எந்த ஒரு நடிகனும் தன்னுடைய 50வது படத்தை "சுறா" மாதிரி கொ(கெ)டுக்க மாட்டான். அஜித் வழக்கம் போல பில்லா வெற்றியை தக்க வைக்க முடியாமல் ஏகன், அசல் என்று ஃப்ளாப் கொடுத்தாலும், அவருக்கு என்று இருக்கும் கூட்டம் தைரியமாகவே இருந்தது. ஏன்னா, விஜய்யும் ஃப்ளாப் லிஸ்டில் தானே இருக்கிறார். இன்னொரு பக்கம் அஜித் "ரசிகர் மன்றத்தை கலைத்தது", "தல என்று பட்டதை மாற்றிகொள்வதர்காக அல்டிமேட் ஸ்டார் பட்டத்தை துறந்து நாடகமாடியது ", "பேட்டி கொடுக்க மாட்டேன், விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன், படத்தை விளம்பரப்படுத்தி பேச மாட்டேன் என்று அவர் அடம் பிடித்தது", என்று அவர் செய்யும் சுயநலமான ஒவ்வொன்றும் பொது மக்கள் மற்றுமின்றி அவரது ரசிகர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் வெறுப்படைய செய்தது

இரு முக்கிய ஹீரோக்கள் தொடர்ந்து ஃப்ளாப் கொடுத்தாலும் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்" என்கிற இடம் ஒருவருக்கு போய்த்தானே ஆக வேண்டும். அது அப்போது இருந்தது சூர்யா கையில்.

விஜய்க்கு எப்படி 2004, 2005 உச்சத்தில் இருந்ததோ சூர்யாவுக்கு 2008ல் இருந்து 2010 வரை அதே உச்சம் இருந்தது. "விஜய் படத்துக்கு அஜித் ரசிகர்களும் அஜித் படத்துக்கு விஜய் ரசிகர்களும் பெரும்பாலும் போக மாட்டார்கள்". ஆனால் அஜித், விஜய் இருவரின் ரசிகர்களும் சூர்யா படத்துக்கு போனார்கள். சூர்யாவிற்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் கம்மி என்றாலும் விஜயை போன்று அவருக்கு, "குடும்ப ரசிகர்கள்" நிறைய இருந்தனர். குடும்பம் குடும்பமா அவர் படத்தை பார்க்க ஆரம்பித்தனர். அவரும் வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என்று பாக்ஸ் ஆபிஸை சிதறடித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் சூர்யாவுக்கும் அந்த “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்" என்கிற நீர்க்குமிழ் உடைய ஆரமபித்தது. அவரே அதற்கு காரணம். எல்லா வாரமும் எதாவது ஒரு பத்திரிகையில் பேட்டி, "ஊறுகாய், தேங்காய் எண்ணெய், துணிக்கடை" என்று எதையும் விட்டு வைக்காமல் விளம்பரம், தன்னடக்கம் என்கிற பெயரில் சுயபுகழ்ச்சி என்று தானும் வழமையான ஒரு நடிகன்தான் என்பதை நிரூபிக்க ஆரம்பித்தார். "சூர்யா முகம் போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது", என்று மக்களே வெளிப்படையாக பேச ஆரம்பித்துவிட்டார்கள். சிங்கம் படத்துக்குப்பிறகு அவர் 2011 தீபாவளிக்கு நடித்த "ஏழாம் அறிவு" எதிர் பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நேரத்தில் தான் விஜயின் தொடர் தோல்வி மற்றும் ஒரே மாதிரி படங்களில் நடிக்கிறார் என்கிற விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் வெளியானது காவலன். நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து பத்திரிகைகளும் விஜயின் நடிப்பை பாராட்டிய தருணம். இருபினும் பல்வேறு அரசியல் காரணங்களால் வசூல் ரீதியில் சுமாரான வெற்றியே பெற்றது. அதே வருடம் ஆளும் கட்சியின் பல்வேறு நெருக்கடிகளை தகர்த்து வெளியான வேலாயுதம் திரைப்படம் தீபாவளி ரேசில் அசத்தலான வெற்றி பெற்றுது.

என்ன தான் விஜய் இரண்டு பெரிய ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அந்த வருடம் அஜித் - வெங்கட் பிரபு கூட்டணியில் பலத்த எதிர்பார்ப்புடன் வெளியான "மங்காத்தா"
திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பிளாக்பஸ்டர் லிஸ்டில் சேர்ந்தது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த படம் இதுவே ஆகும் "தான் ஒரு அஜித் ரசிகன்" என்று கூறவே வெட்கப்பட்டவர்கள் அப்போது தான் கொஞ்சமாக வெளியே தைரியமாக சொல்ல ஆரம்பித்தார்கள். இப்படத்தில் அஜித்தின் சால்ட் & பேப்பர் லுக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்" என்கிற இடத்தை நெருங்கிய அஜித் வழக்கம் போல தனது அடுத்த படத்திலேயே சொதப்பினார். சொல்லபோனால் 2012 ல் அஜித்தின்-"பில்லா 2", சூர்யாவின்-"மாற்றான்", விக்ரமின்-"தாண்டவம்", தனுஷின்-"மூணு", சிம்புவின்-"போடா போடி", ஜீவாவின்-"முகமூடி", கார்த்தியின்-"சகுனி" என விஜயை தவிர பிற அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் படுதோல்வி அடைந்தன. வருட தொடக்கத்தில் நண்பன் என்னும் ஹிட் படத்தை கொடுத்து தனது இன்னிங்க்சை துவங்கிய விஜய், வருட இறுதியில் துப்பாக்கி எனும் ப்ளாக்பஸ்டரை கொடுத்து அசத்தினார். குறிப்பாக விஜயின் துப்பாக்கி பல்வேறு முந்தைய வசூல் ரெக்கார்டுகளை உடைதெரிந்து தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் ரெக்கார்டான எந்திரனுக்கு அடுத்தபடியான இடத்தை பிடித்தது.

தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளாக கொடுத்த விஜய்க்கு அரசியல் மோகத்தால் 2013ல் மீண்டும் வந்த சோதனை தான் தலைவா படம். அரசியல் பஞ்சாயத்துகளால் இப்படம் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் ரிலீஸ் ஆனது. கேரளா, ஆந்திர, ஓவர்சீஸ் பாக்ஸ்ஆபீசில் நல்ல வசூல் செய்தாலும் தமிழ்நாட்டில் 14 நாட்கள் தாமதமாக ரிலீஸ் ஆனதால் ப்ளாப் லிஸ்டில் சேர்ந்தது. அதே வருடம் தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னர் வெளியான அஜித்தின் ஆரம்பம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓரளவு வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியில் தோல்வி அடைந்தது.

இந்த சமயத்தில் தான் விஜய் அஜித் ரசிகர்களின் யுத்தத்துக்கு தீனி போடும்
வகையில் சுமார் எட்டு வருடங்களுக்கு பிறகு 2014ல் விஜய் அஜித் படங்கள் நேரடி மோதலில் களம் இறங்கின.
விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். பொங்கலன்று வெளியான விஜயின் ஜில்லா மற்றும் அஜித்தின் வீரம் சம அளவு வரவேற்புடன் சுமாரான வெற்றி பெற்றாலும் படத்தின் சாடிலைட் உரிமம் முதல் விநியோக உரிமை, தியேட்டர்கள் எண்ணிக்கை, முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல், மொத்த வசூல் வரை விஜயின் கையே ஓங்கி இருந்தது. மேலும் அதே வருடம் விவசாயத்தை மையமாக கொண்டு வெளியான கத்தி திரைப்படம் பட்டி தொட்டியெங்கும் வசூலை அள்ளி துப்பாக்கிக்கு அடுத்தபடியாக பிளாக்பஸ்டர் லிஸ்டில் இணைந்தது மட்டுமில்லாமல் “என்ன நடிச்சாலும் ஹிட்டு ஆகும்" என்கிற வட்டத்திர்க்குள் மீண்டும் விஜயை கொண்டு வந்தது .

இதற்கிடையே 2015 பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்ட என்னை அறிந்தால் படத்தின் விநியோக விற்பனை ஆரம்பம் முதலே படு மந்தமாக இருந்தது. விக்ரமின் "ஐ" படத்தின் ரிலீஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு குடியரசு தினத்தில் ரிலீஸ் செய்யபடுவதாக பின்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்தின் முந்தைய படங்களின் தொடர் தோல்வி காரணமாக விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லை. அதாவது பட ரிலீஸ்க்கு10 நாட்கள் முன்னர் வரை சென்னை விநயோக உரிமை மட்டுமே விற்பனை ஆகியிருந்தது. இந்த திடீர் சிக்கல் காரணமாக மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு ஒருவழியாக பிப் 5 ஆம் தேதி திரைக்கு வந்தது. ஆனால் இப்படம் அஜித் ரசிகர்களுக்கே ஏமாற்றம் அளித்தால் ரிலீசான ஓரிரு நாட்களில் அனைத்து தியேட்டர்களில் இருந்தும் நீக்கப்பட்டது.

மங்காத்தா படத்திற்கு பிறகு அழுத்தமான ஒரு ஹிட் படத்தை அஜித் இன்னும் கொடுக்கவில்லை.
2007 ல் வெளியான பில்லா படத்திற்கு பிறகு அஜித் படம் எதுவும் 50 நாட்கள் கடந்து ஓடியது இல்லை.
இது வரை அஜித் கேரியரில் பார்த்தால்“என்ன நடித்தாலும் ஹிட்டு" என்கிற வட்டத்திற்குள் அவர் வந்ததே இல்லை.
விஜய், சூர்யா போன்று அஜித் இதுவரை தொடர் வெற்றிகளையும் கொடுத்ததும் இல்லை.
 
Nee ethanai thread create panninalum. Enga Thalaya asaikka mudiyathu....

Vedalam Hit adichathunala ungalal thoonga kooda mudiyala illa...

Ethavuthu thedi pidichi kolithi poduppa...

Enga Thala Super starukkum mela.... Thala.... nee ennadanna 2nd category alukku list edukkura....
 
Dont post in regional language :angry
If you want so then post its translation too :)
 
Vijayya, ajitta | Who is truly the Mass? From 2003 - 2015 as a gadget!

Ajith has not yet provided a compelling picture of the hit film Leominster.
Billa, Ajith film after the film was released in 2007 and ran there for 50 days have passed.
Ajith carrier until it sees "what the drama hits as" He never came to the circle.
Vijay, Ajith, Suriya, such as gains given the series so far.

Due to the internet, magazines, Ajith, Vijay is shown to be the overwhelming influence. It may be true. But now they have had to remake this sudden popularity, like MGR 'film Runaway kattinale screen face like' influence? - Knew that a tiny flick - approached Ajith's influence.

About 11 years ago, namely that Jana Ajith's film released on April 17, 2004, Vijay's Gilli released on April 14, 2004, from the start of the day. After the success of the film, the villain in courtship car race, which was forgotten for some time in the cinema, in hysterical id*ots that want to achieve. Varpuruttaluk of fans and race his car cost and select the right story, "ancaneya ',' Jana 'is the order that began carukka. If he is unable to maintain the success of the movie villain.

Vacikara At this time, the modest pictures Bhagwati maintained Vijay 'hill' that gave a mass hit. It went on to pass the 100 days following the 4 images (Friends - 175 days, priyamanavale - 125 days, Khushi - 150 days, Badri - 100 days). Then he began to flick carukka vacikara, scarier, that new Gita.

Success requires mandatory in the context of the hill, he was hit by the director Ramana. Anjaneya's release came on the same day after the hill. Ajit most of the interviews' are timiraka. "I'm the next superstar", "Race is more important to me than cinimava" Everything seemed to mind the image corrupted him up good. Diwali, which happened in 2003. After the huge success of 2004's devastating mocamana failure occurred in Apr. Gilli Vijay, Ajith Jana. "Jana - the power machine vaccat D instead of giving people, Jana - the xerox machine D vaccirukkalam" opanakave acinkappatuttiyatu a newspaper. Flick the channel press interview, the interview team that Gilli began to promote. Cintuvarillai Ajith. In the same year, named Vijay Udaya flap, despite the success of Gilli concealed it. Last year the 'Mathura' film won the audience gratifying. But Ajit came to the annual Diwali 'pump', fans have to say is that even a little cheated.

At this time, a Mass that emerged just couldnt. He said, "What hit drama movie" The name came from. 3 films released in 2005, he starred as the hero (Thirupachi, Sachin, Sivakasi) won. Sachin's modest success. Because it is put in competition with Chandramuki. Ajith acted in the same year, the great expectations the "G" attar flap became. Following two years with Ajith in a film also does not hit. Vijay Almost All of the hit. Vijay's "Next Robot", "collection King" etc., and started talking. Ajith will be "oppanin King" The degree also began to be shaken.

Both in 2006 and in Thaipongal Siva, who originally faced. Although both films failed, Shiva ran better than the original. In 2006, the year after the film playing atiye carukkiyat waited for the flick. Ajith In the same year, the "Tirupati" AVM. Because the banner produced 100 days of O (TIN) closed down. Will? Emanate? That kakkavaitta "History" Diwali came residue Put laid. The time id*ots while sliding KS. Ravi Kumar's success, giving them survived. But Ajit this success could not be maintained. 2007 Thaipongal Ajith 'Alvar' to come, the trace ceased to exist. Vijay scamp arrived gave the brake and hit record. The same year, released Ajith's crown failed.

It is in this context that Ghajini Suriya row, six, Sillunu a romance, strange stories that appeared in the Vale "Vijay is the perfect match for me," the pace of progress. He forgot all except Ajith fans. Vijay also "plays the same way," the charges began strengthening.
Pongal in 2007, the "whale" to bear throughout the year, such as the one that hit gave the film Surya acted. Vijay in dual role 'beautiful Tamil son played in the film. Vijay's "What's the drama of running" the image of this place is just the beginning. Ajith end of the year in the "Billa" The Blockbuster giving hat trick flap was gone. But Vijay beautiful Tamil son the same movie through SMS joke up into trouble lured to.

2008, 2009, 2010, lined Sparrow, Wiley, shark flick that gave subsequent flap, too, which is a performer of his 50th film "Shark" model Crane (Kevin) will tukka. As usual, unable to sustain the success of Ajith Billa Egan, the original flap that gives the meeting that he had boldly. Because, Vijay flap is not in the list. Another page id*ots "fan forum dissolved", "Reine seemed marrikolvatark Ultimate Star title renounced staging", "the interview will not pay, the festivities will not take part, image advertising will not speak, he is adamant peaking", he will make the self, each public marruminri his Fans, created frustration among producers

Following the flap while the two main heroes, "What is naticcalum hits" that have become poyttane one location. It was then on hand to Surya.

2004 How to Vijay, Surya was at the height of 2005 to 2010 and from 2008 was the peak. "Vijay and Ajith fans and film fans, Vijay and Ajith film will most likely go". But Ajith, Vijay, Surya and fans of both the film went on. Though less visits for her personal fan curyavirkenru Corps, "the family of fans" were a lot. He began to see the image of the family, with family. He Vaaranam thousand, Iron, sun, lion apisai citaratittukkontiruntar the box. But Surya that "what naticcalum hits was" The Bubble's aramapittatu. He is the reason for that. Every week something in a newspaper interview, "pickles, coconut oil, Fabric Store," anything that leaves ad, temperance named cuyapukalcci that he commonplace natikantan prove that started. "Surya face war hit begun", that people openly started talking. Lion patattukkuppiraku the 2011 Diwali featuring "seventh sense" against the saw did not do well. This time it's Vijay's series defeat and the same films, plays the critics stop to the release mount. Vijay press hailed the performances of all time after long days. However the modest box office success achieved by the various political reasons. The same year, the ruling party has broken down the various crises of the film's release on Diwali Velayudan impressive win in the race.

Both Vijay and Ajith, the year's big hit is what has given the images - Venkat Prabhu coalition with the strong expectation of release "ou"
Added to the great success of the movie blockbuster list. It is the highest grossing film of the year, "she is a fan of id*ots," he began to speak boldly out just a little bit shy then. Ajith's look in the film Salt & Paper greatly impressed the audience. "What is naticcalum hits as" close to the place of the usual id*ots cotappinar his next film. Ajittin in 2012 by trying to tell "Billa 2", curyavin "step", vikramin "felt", tanusin "three", cimpuvin "Poda Podi "jivavin" mask ", karttiyin" Sakuni "the visit other than to embrace the leading actors of the films lost badly. year beginning Friend The hit film gave the innings started flick, the year-end of the gun the plakpastarai giving acattinar. Especially Vijay's gun several previous collections utaiterintu records the highest grossing Tamil film Enthiran rekkartana peaked after.

Followed by a hat-trick of victories in 2013 came back to Vijay political infatuation experimental film's headwaters. Other states except Tamil Nadu Panchayats and the politics of the film was released in other countries. Kerala, Andhra Pradesh, Tamil Nadu, has made good recovery in overseas paksapic delayed release of the 14 days of becoming flop added to the list. Diwali is the beginning of the year, four days before the release of the same id*ots have been well received among fans of the film a box office failure of some wins.

Vijay and Ajith fans during this time of the war and fancies
Nearly eight years after the conflict in 2014, Vijay and Ajith images in live chats.
Vijay, Ajith fans keen to respond to the fans waited with great anticipation. Pongal release of Vijay and Ajith's valor equal collector of modest size with a reception Satellite License wins first distribution rights of the film, the number of theaters, first-day box office, grossing up Vijay's hand was raised. The knife, which was released the same year, with a focus on agriculture and gathering the gun next to Blockbuster Movie Menu tottiyenkum collections also joined the list of "hits naticcalum is what" came to visit the vattattirkkul again.

Meanwhile, it was announced that the 2015 rice output knew me from the beginning of the film's distribution was slowed lye. Vikram's "I" been postponed due to the release of the film's release date was announced after ceyyapatuvat. Due to the failure of the previous films in the series, but Ajith distributors nobody was willing to buy the picture. Up to 10 days prior to the release of the Image Archives vinaye had sold the rights. This problem is due to the sudden re-release date is finally transformed to the screen came on Feb. 5. Ajith film released a few days but we had disappointing racikarkalukke removed from all theaters.

Ajith has not yet provided a compelling picture of the hit film Leominster.
Billa, Ajith film after the film was released in 2007 and ran there for 50 days have passed.
Ajith carrier until it sees "what the drama hits as" He never came to the circle.
Vijay, Ajith, Suriya, such as gains given the series so far.
 
sasitnj said:
Nee ethanai thread create panninalum. Enga Thalaya asaikka mudiyathu....

Vedalam Hit adichathunala ungalal thoonga kooda mudiyala illa...

Ethavuthu thedi pidichi kolithi poduppa...

Enga Thala Super starukkum mela.... Thala.... nee ennadanna 2nd category alukku list edukkura....

This is only for people who are using their brain atleats 1/3 :lol
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock