விஜயகாந்தை எதிர்த்து ரிஷிவந்தியத்தில் போட்

  • Thread starter Thread starter kramkumar
  • Start date Start date
  • Replies Replies: Replies 0
  • Views Views: Views 1,502

kramkumar

Contributor
Joined
22 Mar 2011
Messages
839
Reaction score
267
நடிகர் விஜயகாந்தை எதிர்த்துப் போட்டியிடுவது பற்றி ஆலோசித்துக் கொண்டுள்ளேன். இதுபற்றி பின்னர் அறிவிப்பேன் என்றார் நடிகர் வடிவேலு.

தமிழ் சினிமாவில் மிகப் பரபரப்பான 'நிஜ சண்டைகளில்' ஒன்று வடிவேலு - விஜயகாந்த் மோதல்.

இருவரது ஆதரவாளர்களும் கடந்த ஆண்டு கடுமையாக மோதிக் கொண்டனர். வடிவேலு வீட்டில் விஜயகாந்த் ஆதரவாளர்கள் கல்லெறிந்து சேதம் விளைவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து அன்றைக்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் வடிவேலு, "அடுத்த சட்டசபை தேர்தலில் நடிகர் விஜயகாந்த் தமிழ்நாட்டில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ வைப்பேன். தமிழ்நாட்டில் ஒவ்வொரு தாய்மார் காலிலும் விழுந்து அவரை தோற்கடிக்க வைப்பேன்,'' என்று அறிவித்தார்.

இப்போது தேர்தல் வந்துள்ளது. வடிவேலுவும் 'தன் சபதத்தை' நிறைவேற்றிக் கொள்ள திமுகவின் பிரச்சாரப் புயலாக மாறியுள்ளார்.

தே.மு. தி.க. தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவிப்பு வந்த உடனே, வடிவேலுவும் ரிஷிவந்தியத்தில் போட்டியிடப்போவதாக கூறப்பட்டது.

எனவே நடிகர் வடிவேல் நேற்று முன்தினம் கருணாநிதியை சந்தித்தார். பிறகு அவர் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்தார்.

விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியம் தொகுதியிலும் வடிவேலு பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இங்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்தி அதிக நாட்கள் பிரச்சாரம் செய்யப் போகிறாராம்.

கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் இன்று (புதன்கிழமை) வடிவேலு பிரசாரத்தைத் தொடங்குகிறார். ரிஷிவந்தியத்தில் அவர் போட்டியிடக் கூடும் என்றும் கூறப்பட்டது. எனவே இதுகுறித்து வடிவேலுவிடம் நிருபர்கள் கேட்டனர்.

இது பற்றி வடிவேலுவி கூறுகையில், "விஜயகாந்துக்கு எதிராக பிரசாரம் செய்வேன். அவரை எதிர்த்து போட்டியிடுவது தொடர்பாக முடிவு எடுக்கும் முன் இன்னும் சிலருடன் ஆலோசிக்க வேண்டியதுள்ளது. அதன் பிறகு என் திட்டத்தை வெளியிடுவேன்'' என்றார்.

தி.மு.க. கூட்டணியில் அந்த தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Back
Top Bottom