Over 50 Chennai LCO's pull Madras HC against Arasu. Why Arasu hibernates?

  • Thread starter Thread starter HOUSE-MD
  • Start date Start date
  • Replies Replies: Replies 1
  • Views Views: Views 1,205

HOUSE-MD

Contributor
Joined
16 Oct 2012
Messages
3,195
Reaction score
1,209
பலமுனை தாக்குதலில் அரசு கேபிள் டிவி...!!

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு தகவல் அமைச்சகம் மற்றும் TRAI, டிஜிட்டல் லைசென்ஸ் குறித்து தங்களது நிலையை தெரிவித்துள்ள படியால்.... தமிழக அரசு கேபிள் பல முனை வழக்கு சட்ட தாக்குதல்களை நீதிமன்றத்தில் எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

CCI எனப்படும் காம்படீஷன் கமிஷன்னில் தொடங்கப்பட்ட வழக்கு... TDSAT, சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றம் வரை நீண்டுள்ளது...

CCI யில் வழக்கு விசாரணைகள் முடிந்து விட்ட நிலையில்தான் அதன் இறுதி தீர்ப்பிற்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை ஆணை பெற்றுள்ளது அரசு கேபிள்...

நேற்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட TDSAT வழக்கு... நடுவர் அவர்கள் வராத காரணத்தினால் வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...

இதை எல்லாம் விட நேற்று சென்னை உயர்நீதி மன்றத்தில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட சென்னை ஆப்ரேட்டர்கள் ஒரே நேரத்தில் தனித்தனியாக அரசு கேபிள் டிவிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது... சென்னையில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர் அல்லாத புதியவர்களுக்கு அனலாக் சிக்னல் ஒளிபரப்பு கொடுத்து ஏற்கனவே அந்த பகுதியில் தொழில் செய்து வரும் ஆப்ரேட்டர்களின் இணைப்புகளை பறித்து வாழ்வாதாரத்தை பாதிப்படைய செய்து வருகிறது என கூறி வழக்கு தொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு.... சந்தா ஆப்ரேட்டர்களை விட சட்ட ஆப்ரேட்டர்கள் அதிகரித்து வருகின்றனர் என்பது மட்டும் தெளிவாக புரிகிறது.

வழக்கு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது என்ன செய்யபோகிறதோ....என சென்னை மக்களின் எதிர்பார்ப்பில் அரசு கேபிள்..!!

==

Eng Translation:

Arasu cable under multiple directional Attack.

==

Over 50 LCO's from Chennai have filed case against Arasu cable in Madras HC.
 
Moderators please remove this duplicate thread created due to an error.
 
Back
Top Bottom