RE: Vijay's Theri - Mass+Class vijay in next level
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு இன்று வெளியான தெறி திரைப்படம் கடும் சர்ச்சையில் சிக்கியுள்ளது!
இன்று கோவையில் வெளியிடப்பட்ட தெறிப்படத்தை திரையரங்கத்திற்கு உள்ளிருந்தே பாலிமர் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்கள் பதிவு செய்துள்ளனர் ! பதிவு செய்யப்பட்டப் படங்களை பல கோடிகளுக்கு விற்பனை செய்துவந்துள்ளனர் பாலிமர் நிர்வாகத்தினர் !
இது குறித்து தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் சிவா ..." பாலிமர் தொலைக்காட்சி நிறுவனம் இந்தத் திருட்டுத் தொழிலை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறது . 2003 ஆண்டில் இதே போன்று அவர்கள் செய்து வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் கடந்தப் பல ஆண்டுகளாக கேபில் டி.வி என்றப்பெயரில் இந்தத் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு பல கோடிகளை சுருட்டி உள்ளது ! எங்கள் ரத்தத்தை உறிஞ்சி அவர்கள் சுருட்டியப் பணத்தில்தான் பாலிமர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது ! தொலைக்காட்சியாக மாறியப் பிறகாவது அவர்கள் திருந்திவிடுவார்கள் என்று நாங்கள் நம்பினோம் . மற்ற ஊடகங்களுடன் நட்புப் பாராட்டுவது போல் பாலிமர் நிறுவனத்துடனும் இணைந்தே செயல்பட்டோம். திரையுலகமும் ஊடகமும் இணைந்த உறவுகள். இரண்டையும் பிரிக்க இயலாது! ஆனால் , உடனிருந்தேக் கொல்லும் வியாதியாக பாலிமர் நிறுவனம் திரைமறைவில் தன் திருட்டுத் தொழிலை செய்துகொண்டே இருந்துள்ளது! இன்று கையும் களவுமாக பிடிப்பட்டுள்ளது ! இனி நாங்கள் பாலிமர் தொலைக்காட்சியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளப்போவதில்லை ! பாலிமர் நிறுவனர் கல்யாண சுந்தரம் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்வரை நாங்கள் ஓயப்போவது இல்லை!