Cable tv cut on 23rd Dec 2014 due to protest demanding for subscription raise to Rs 150.
==
கேபிள் 'டிவி' ஒளிபரப்பை நிறுத்த ஆபரேட்டர்கள் முடிவு
==
கட்டண உயர்வை முன்னிறுத்தி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய, தமிழக கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் பொதுநல சங்கம் முடிவு செய்துள்ளது. அன்றைய தினம், தமிழகத்தில் கேபிள் 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தப்படும்.
கேபிள் 'டிவி' தொழிலில், தனியார் ஆதிக்கத்தை நீக்கி, கடைக்கோடியில் உள்ள மக்களும் பயன்பெறும் வகையில், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம் செயல்படும் என்ற, அரசின் அறிவிப்பு, பெரும் வரவேற்பையும் பெற்றது. மிகக் குறைந்த கட்டணமாக, மாதம், 70 ரூபாய்க்கு, கேபிள் 'டிவி' சேவை அளிக்கப்பட்டது. மூன்றரை ஆண்டுகளாக, இந்த கட்டணம் நீடித்து வருகிறது. இணைப்புகள் பராமரிப்பு செலவு, தொழிலாளர் ஊதியம் மற்றும் விலைவாசி உயர்ந்துள்ளதால், கேபிள் 'டிவி' கட்டணத்தை, 150 ரூபாயாக உயர்த்த வேண்டும் என, இரண்டு ஆண்டுகளாக, ஆபரேட்டர்கள் கோரி வருகின்றனர். ஆனால், இக்கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.
இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் ஆறுமுகம் கூறியதாவது: அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்துக்கு, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் வழங்கப்படவில்லை. இதனால், சென்னையில் அரசு கேபிள் 'டிவி' நிறுவனத்தால், முழுமையான ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. சென்னையை தொடர்ந்து, இரண்டாம் நிலை நகரங்களிலும், டிஜிட்டல் ஒளிபரப்பை, மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. டிஜிட்டல் உரிமம் பெற வேண்டும் என்ற நோக்கில், கேபிள் 'டிவி' கட்டணத்தை உயர்த்த அரசு மறுக்கிறது. எந்த முதலீடும் செய்யாமல், கேபிள் 'டிவி' ஒளிபரப்பு மூலம், அரசு கேபிள் 'டிவி' நிறுவனம், 15 கோடி ரூபாய் லாபம் ஈட்டுகிறது. ஆனால், ஆபரேட்டர்களின் வாழ்வாதாரம் மோசமடைந்து வருகிறது. இம்மாதம் 23ம் தேதி, 10 ஆயிரம் ஆபரேட்டர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம், சென்னையில் நடக்கிறது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை நடத்துகிறோம். அன்றைய தினம், தமிழகம் முழுவதும், கேபிள் 'டிவி' ஒளிபரப்பு நிறுத்தப்படும். இதற்கான தேதி, சென்னையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தின் போது அறிவிக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
==
Source:
| கேபிள் 'டிவி' ஒளிபரப்பை நிறுத்த ஆபரேட்டர்கள் முடிவு ...