RE: Thala Ajith Vedalam - collection record
Awesome
அருமையான கமர்ஷியல் ஹிட் மெட்டீரியல்! என்ன ஒரு பதினைந்து.. இருபது வருஷம் பிந்தி வந்து விட்டது! இன்றைய தேதியில் ஒரு நல்ல கமர்ஷியல் படத்திற்கான தேவை-நான்கைந்து மாஸ் சீன்கள், ஏழெட்டு தெறி பஞ்ச்சுகள், இரண்டு மூன்று ஹிட் சாங்குகள் மற்றும் இவையனைத்தையும் போரடிக்காமல் இணைக்கும் லாஜிக்குடன் கூடிய திரைக்கதை என்கிற சங்கிலி! வேதாளத்தில் மேற்சொன்ன வஸ்துகள் அனைத்துமிருந்தாலும் "லாஜிக்குடன் கூடிய" என்கிற சங்கதி மட்டும் மிஸ்ஸிங்! இன்றைக்கு லாஜிக்கில்லாம் பரபர ஸ்கிரீன்-ப்ளேவை மட்டும் வைத்துக்கொண்டு ஜல்லியடிக்கலாம் என நினைத்தால், அது சூப்பர் ஸ்டாராக இருந்தாலுமே கதைக்காகாது என்பதை கடந்த பத்து வருடங்களாக பார்த்து வருகிறோம்!
அப்புறம்.. சிலருக்கு ஜாக்கெட் ஹூக்கை கழற்றும் முன்னரே துரித ஸ்கலிதம் அடைந்து விடும் வியாதி இருப்பதைப்போல- தல ரசிகர்கள் அனைவருக்கும் சொல்லிவைத்தாற்போல தங்களின் ஆதர்ஸ நாயகனை திரையில் காட்டும் போதெல்லாம் ஆர்கஸம் அடையும் ஒரு கொடும் வியாதி இருப்பதை தியேட்டரில் கண்டேன்! அவர்கட்கு எம் அனுதாபங்கள்!
"போம்மா பொண்ணே.. என்னை முதுகுல குத்துனவுங்க பலபேரு..".என்கிற பஞ்ச் வசனத்திற்கு தியேட்டர் கூரை தெறிக்குமளவிற்கு கத்தித்தீர்த்தார்கள்! என்னப்பாவென பக்கத்து சீட்காரரிடம் விஜாரித்தால்- தலயுடைய பெர்சனல் வாழ்க்கையை ரிலேட் செய்து கொண்டார்களாம்! அதற்கும் முன்பு "நீ கெட்டவன்; நான் கேடு கெட்டவன்" என்றொரு பஞ்ச்! அதற்கும் இதேயளவு கரகோஷம்! இதற்கு எதை ரிலேட் செய்து கொண்டார்களென தெரியவில்லை!
தல அஜித், பஞ்ச் பேசுகிறேனென காமெடி செய்கிறார்; சண்டை செய்கிறேனென டான்ஸ் ஆடிக்கொண்டே காமெடி செய்கிறார்; அதுபோக தனியாக பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறேனென காமெடி செய்கிறார்; அன்னியன்-அம்பி போல ஒரே சீனில் மாறிமாறி நடிக்கிறேன் பாரென காமெடி செய்கிறார்; சென்னை பாஷை பேசுகிறேன் பேர்வழியென காமெடி செய்கிறார்; ஆனால் காமெடி செய்கிறேனென காமெடி செய்யும் போது மட்டும் இந்த சிரிப்பு எழவு வந்துத்தொலைய மாட்டேனென்கிறது!
அதிலும் தல மெட்றாஸ் பாஷை பேசுவதெல்லாம் வேற லெவல்! வழக்கமான மாடுலேஷனில் பேசிக்கொண்டிருப்பவருக்கு திடீர்திடீரென தாம் வடசென்னை ரவுடி கதாபாத்திரத்தில் நடிப்பது ஞாபகத்திற்கு வர, மெட்றாஸ் ஸ்லாங்கில் ஒன்றிரண்டு வார்த்தைகளை உதிர்க்கிறார்.. பிறகு மீண்டும் மெட்றாஸ் ஸ்லாங் கதாபாத்திர மேட்டர் மறந்து, நார்மல் ஸ்லாங் மோடுக்கு மாறி விடுகிறார்.. அல்டிமேட் ரோஃபல்!
அதுபோக.. ஃப்ளாஷ்பேக்கில் காமெடி கலந்த ரவுடி கேரக்டர் என்பதை ஆடியன்சுக்கு ஞாபகப்படுத்துவதற்காக அடிக்கடி "தமாசு..தமாசு" என சொல்லிக்கொள்கிறார்! ஏனோ எனக்கு சந்தானத்தின் "ஹ்யூமர்.. ஹ்யூமர்" காமெடி ஞாபகத்திற்கு வந்தது! இல்லை.. ஏதும் ப்ளாக் ஹ்யூமர் வகையறாவில் முயற்சித்திருக்கிறார்களா எனவும் தெரியவில்லை!
அனேகமாக டிஸ்கஷனில் இதுதான் நடந்திருக்கும்.
"சார்.. இந்த வேதாளத்தோட கேரக்டர் ஸ்கெட்ச் பாத்தீங்கன்னா.. எ டெர்ரர் நார்த் மெட்றாஸ் ரவுடி வித் எக்ஸ்ட்ராடினரி ஹ்யூமர்சென்ஸ்.. காமெடில ச்சும்மா பூந்து வெளாடுறீங்க.."
"அப்டியா.. ஸ்கிரிப்ட்ல அவ்ளவா ஹ்யூமர் இருக்கா மாதிரி தெர்லியே ஜீ?!"
"அப்டீங்கறீங்க.. சரி ஒன்னு பண்ணுவோம்! டயலாக்ஸ் பேசும்போது அடிக்கடி தமாசு..தமாசுன்னு சொல்றீங்க! ரசிகனும் இதுவும் ஏதோ பஞ்ச் டயலாக்குன்னு நெனச்சி க்ளாப்ஸ், விசில் தெறிக்க விடுவான்.. அப்டியே மேட்ச் பண்ணிக்கலாம் சார்.."
கொடுமை கொடுமையென ஒயின்ஷாப்பிற்கு போனால், அங்கொரு கொடுமை கூலிங்பீர் இல்லையென சொல்லிச்சாம் கதையாக- தல செய்யும் காமெடிகள் போதாதென சூரி வேறு! முன்னாடியெல்லாம் ஒரு படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு திருஷ்டி கழிய பூசணிக்காய் உடைப்பார்கள்! இப்போது அந்த திருஷ்டியை படத்திற்குள்ளாகவே வைத்துவிடுவோமென முடிவுசெய்து சூரியை புக் செய்கிறார்களென நினைக்கிறேன்!
ஒரு படத்தில் ஹீரோ என்று இருந்தால், அவருக்கு ஃப்ளாஷ்-பேக் என்கிற ஒன்று இருக்குமல்லவா?! ஃப்ளாஷ்-பேக் என்கிற ஒன்று இருந்தால், அதை கேட்பதற்கு ஹீரோயின் என்று ஒருவர் வேண்டுமல்லவா?! அந்த ஹீரோயின் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் வந்து போகிறார்! தங்கையாக வரும் லக்ஷ்மி மேனனுக்கு லைக்ஸுகள்! மாண்டேஜ் பாடல் தவிர்த்து படத்தில் மூன்றே பாட்டுகள் என்பது ஆறுதல்; அதில் ஒன்று கூட டூயட் இல்லை என்பது பேராறுதல்!
இசை- நம்பர் டூ ராக்ஸ்டார் அனிருத்! நானும் ரவுடிதானில் கிடைத்த நற்பெயரை இதில் பேலன்ஸ் செய்து பழைய ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார்.. வாழ்த்துக்கள்!
இயக்குனர் சிவா- அடுத்த படத்துக்கும் இயக்குனர் இவர்தானென தல, கமிட் செய்யுமளவிற்கு இம்ப்ரெஸ் செய்திருக்கிறார்.. நம்மையல்ல; தலயை! எவ்வளவு அடிச்சாலும் அஜித்குமார் ஒடம்பு தாங்கும்; நம்ம ஒடம்பு தாங்குமா?! அபிராமி.. அபிராமி! எது எப்படியிருந்தாலும்.. ஒரு ஸ்கிரிப்டில் இயக்குனருக்கும், ஆடியன்சுக்குமான பிணைப்பு ரொம்பவும் முக்கியம்! இதில் அவ்வாறான டெலிபதி பிரமாதமாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது.. எந்தளவிற்கென்றால்- திரைக்கதையில் அடுத்து இதுதான் நடக்குமென நீங்கள் ஊகிக்கக்கூடிய அனைத்தும் அட்சரம் பிசகாமல் அப்படியே நடக்கிறது! இதற்கு ஒரு சிறப்பு ஷொட்டு!
கடைசியாக- துவக்கத்தில் டைட்டில் கார்டு போடும்போது.. கதை என்பதற்கு கீழே, சிவாவுடன் இன்னொருவர் பெயரும் வருகிறது! அவர்தான் ஏய் படத்தின் கதாசிரியரா என்பதை அறிந்துகொள்ள அவா.. அறிந்த நண்பர்கள் உதவவும்.. நன்றி!