Thalaiva BANNED in TN.

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 65
  • Views Views: Views 11,547
விஜய்யின் தலைவா படத்திற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு?!

துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் தலைவா. விஜய் ஜோடியாக அமலாபால், இந்தி நடிகை ராகினி ஆகியோர் நடித்துள்ளனர். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரித்துள்ளார். இப்படம் வருகிற 9ம் தேதி ரம்ஜான் பண்டிகை அன்று உலகம் முழுக்க சுமார் 2000 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. வேந்தர் மூவிஸ் இப்படத்தை வெளியிட உள்ளனர். இந்நிலையில் தலைவா படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.

சென்னையில் தலைவா படத்திற்கு இன்று(ஆகஸ்ட் 7ம் தேதி) முன்பதிவு செய்ய மு‌யன்ற ஐநாக்ஸ், சத்யம், மகாராணி, அபிராமி, தேவி, மாயாஜால், பாரத், ஏ.ஜி.எஸ்., பி.வி.ஆர். உள்ளிட்ட 9 திரையரங்குகளுக்கு போனில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது. தலைவா படத்தை உங்கள் திரையரங்குகளில் வெளியிட்டால் திரையரங்கில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டியவர்கள், தமிழ்நாடு ஒடுக்கப்பட்ட மாணவர் புரட்சிப்படை எனும் பெயரில் இந்த மிரட்டல்களை விடுத்துள்ளனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுஒருபுறம் இருக்க தலைவா எனும் பெயர் இட்டநாள் முதலே பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்ப்புக்கு உள்ளாகி வந்த இப்படம் இப்போது ஆளுங்கட்சியின் எதிர்ப்பை சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு சில பல அரசியல் கட்சிகள்(ஆளும்கட்சி?) மிரட்டல் விடுத்து முன்பதிவாக டிக்கெட்டுகளை விநியோகிக்க வேண்டாம் என தடுத்து வருவதாகவும் மேலும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட படஅதிபர்கள், இயக்குனரை அழைத்து பஞ்சாயத்து நடத்தி வருவதாகவும் தெரிகிறது. படத்தில் தமிழக அரசின் பெரும் சாதனையான இலவச அரிசி, மதிய உணவுத்திட்டம் உள்ளிட்டவைகளை ஒரு சில காட்சிகளில் கிண்டல் அடித்து இருப்பதாகவும், கேலி செய்திருப்பதாகவும் கேள்விப்பட்டு அரசியல் கட்சியினர் பிரச்னையை பெரிதாக்கி வருவதாக தெரிகிறது. இதன் வெளிப்பாடாக நாளை(ஆகஸ்ட் 8ம் தேதி) நடக்க இருந்த தலைவா படத்தின் பத்திரிக்கையாளர்கள் சிறப்பு காட்சியும் தள்ளிப்போக உள்ளதாக தகவல்.

இதற்கிடையே தமிழகம் முழுக்க தலைவா படத்தை திரையிடப்ப‌ோவது இல்லை என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் முடிவு எடுத்திருப்பதாகவும் கடைசிகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சென்னை: அரசின் ஒத்துழைப்பின்றி தலைவா படத்தைத் தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. விஜய் நடித்த தலைவா படத்தை தமிழகத்தில் 500 ப்ளஸ் அரங்குகளிலும், வேறு சில நாடுகளிலும் திரையிட முடிவு செய்திருந்தனர். கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மும்பையில் இந்தப் படம் வெளியாகிறது. நாளை மறுநாள் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தப் படத்தைத் திரையிடுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன.

இப்போது படம் வெளியாகுமா என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தப் படத்துக்கு தலைவா என தலைப்பு வைத்ததிலிருந்தே சிக்கல்தான். காரணம், அடுத்த சிஎம் என்ற இலக்கை முன்வைத்து விஜய்யும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரும் பேசி வந்த பேச்சுகள் ஆட்சியாளர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. படத்தின் கதையும் அரசியல் களத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால், படத்துக்கு வரிவிலக்கு உள்பட எந்த சலுகையும் அரசுத் தரப்பிலிருந்து கிடைக்காத நிலை. இந்த சூழலில் படம் வரும 9-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் உலகெங்கும் 2000 அரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்தார். அந்த செய்தி வெளிவந்த அடுத்த சில நிமிடங்களில் படத்தின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. மேலும் படத்தை வெளியிடுவதில்லை என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பேச ஆரம்பித்தனர். திரையரங்கு உரிமையாளர்கள் அவசர கூட்டம் இந்த சூழலில் சென்னை - செங்கல்பட்டு மாவட்ட திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று சென்னையில் கூடியது. அரசுக்கு எதிரான படமாகக் கருதப்படும் தலைவாவை வெளியிட அரசின் ஒத்துழைப்பு, தியேட்டர்களுக்குப் பாதுகாப்பு மிகவும் அவசியம். இந்த இரண்டும் உறுதி செய்யப்படாத நிலையில் தலைவா படத்தை வெளியிடுவது நல்லதல்ல என்ற உண்மை புரிந்து, தமிழகமெங்கும் படத்தை வெளியிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அரசின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தப் படத்தை திரையிடுவது குறித்து பரிசீலிப்போம், என அறிவித்துள்ளனர். இதனால் திரையுலகிலும் விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடி செய்திகளுக்கு எப்போதும் ஒன் இந்தியாவுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/08/chennai-chengalpattu-exhibitors-stopped-thalaivaa-release-180758.html
 
Just In - Why is there an uncertainty surrounding Thalaivaa's release?
Aug 07, 2013

Some of the leading theaters which were set to screen Thalaivaa in Chennai City, have suddenly stopped their advance bookings, as they have allegedly received threats from anti-social elements regarding possible violence, if Thalaivaa were screened in their properties.

There is an uncertainty over the release of the movie and by today evening, a clear picture is expected to emerge. The producers are meeting with important members of the trade and their negotiations are expected to pave the way for the film's smooth release.

In such a scenario, heavy police presence at the theaters screening Thalaivaa, is expected in order to avoid any untoward happenings.
 
Back
Top Bottom