Thalaiva BANNED in TN.

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 65
  • Views Views: Views 11,547
தலைவா... ஒரு வாசகரின் விமர்சனம்!

இயக்குநர் விஜய், நடிகர் விஜய் இருவருக்குமே சொந்த சரக்கில் நம்பிக்கை இல்லை என்பதற்கு இன்னொரு சான்று தலைவா. இந்த முறை தெலுங்கு, ஆங்கிலப் படங்கள் எதிலும் கைவைக்காமல், உள்ளூர் க்ளாசிக்குகளான நாயகன், தேவர் மகனே போதும் என முடிவு செய்துவிட்டார்கள் போலிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஜாலியாக டான்ஸ் குழு நடத்தும் விஜய், தன் அப்பா சத்யராஜை சில சமூக விரோதிகள் கொன்றுவிட, மும்பை திரும்புகிறார். தந்தையின் இடத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். முட்டுக் கட்டையாய் வந்து நிற்கும் சதிகார சமூக விரோதிகளுடன் மோதி மக்கள் தலைவனாகிறார். இதைத்தான் பாட்டு, சண்டை, காமெடி என கதம்பமாக்கி கிட்டத்தட்ட 3 மணி நேரத்துக்கு ஜவ்வாய் இழுத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

விஜய்யின் நடிப்பு என்று தனியாகக் குறிப்பிட ஒன்றுமில்லை. அந்தப் பாத்திரமாகவே மாறியிருக்கிறார். ஆனால் அவர் பல்லைக் கடித்துக் கொண்டு பஞ்ச் விடுவதிலும், வில்லன்களுக்கு அறிவுரை சொல்வதும்தான் ரொம்ப போரடிக்கிறது. நடனத்திலும் சண்டைக் காட்சிகளிலும் வழக்கம்போல அசத்தியிருக்கிறார். ஹீரோயின் அமலா பாலுக்கு பெரிதாக ஒரு வேலையுமில்லை படத்தில். அவரும் பார்க்க ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார். சில காட்சிகளில் சந்தானம் சிரிக்க வைக்கிறார். யு ட்யூப் புகழ் சாம் ஆன்டர்சனும் இந்தப் படத்தில் காமெடி செய்திருக்கிறார். சிரிப்புதான் வரமறுக்கிறது. சத்யராஜுக்கு முக்கியமான பாத்திரம்தான். ஆனால் அவரது பாத்திரம், அவரது காஸ்ட்யூம் எல்லாமே ஏற்கெனவே அமிதாப் நடித்த சர்க்கார் படத்தை நினைவூட்டுகிறது. வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலும் அதற்கான நடனமும் கவர்கின்றன. மற்ற பாடல்களும் ஓகே ரகம்தான். ஆனால் பின்னணி இசை காட்சிகளை இன்னும் டம்மியாக்கும் அளவுக்குதான் உள்ளது. படத்தின் பெரிய பலம் நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு. உள்ளூர் சினிமாவிலிருந்து உலக சினிமா வரை பார்த்தாலும் அவற்றை உல்டா பண்ணுவதுதான் தன் வேலை என்பதில் தெளிவாக இருக்கிறார் இயக்குநர் விஜய். அது எல்லா நேரத்திலும் கை கொடுக்காதல்லவா! என்னுடைய ரேட்டிங்.... 2/5.

Read more at: தலைவா... ஒரு வாசகரின் விமர்சனம்!- thalaivaa user review - Oneindia Tamil



Read more at: http://tamil.oneindia.in/movies/review/2013/08/thalaivaa-user-review-180853.html
 
வேளாங்கண்ணியில் விஜய் சிறப்பு பிரார்த்தனை - திருப்பலி!

சென்னை: தலைவா படம் இன்று ரிலீசாகாத நிலையில், நாகப்பட்டினம் சென்றுள்ள விஜய், வேளாங்கண்ணி மாதா கோயிலில் சிறப்புப் பிரார்த்தனை நடத்துகிறார். அவருக்காக திருப்பலி நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அந்த மாவட்ட விஜய் ரசிகர் மன்றம் செய்துள்ளது. விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது, தமிழகம் தவிர. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பையிலும் படம் வெளியாகியுள்ளது. ஆந்திராவில் அண்ணா என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் எங்கும் இந்தப் படம் திரையிடப்படவில்லை. எப்படியாவது படத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் கொடநாட்டுக்கே போய் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கும் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில் கோவையில் நேற்று இரவு தங்கிய விஜய், பின் அங்கிருந்து நாகப்பட்டினத்துக்கு வந்தார். இன்று மாலை அவர் வேளாங்கண்ணியில் உள்ள புகழ்பெற்ற மேரி மாதாவின் தேவாலயத்துக்குச் செல்கிறார். தேவாலயத்தில் சிறப்புப் பிராத்தனை மற்றும் திருப்பலிக்கு விஜய்யின் ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதில் பங்கேற்று பிரார்த்தனை நடத்துகிறார் விஜய்.

Read more at: http://tamil.oneindia.in/movies/heroes/2013/08/vijay-attend-special-prayer-at-velankanni-church-180915.html
 
this is usual,vijay always go to santhome and velankanni church on his every new film release day.
 
ஆக 12-ம் தேதிக்குப் பிறகு விஜய் & கோவுக்கு முதல்வர் அப்பாயின்ட்மென்ட்.. சுதந்திர தினத்தன்று ரிலீஸ்?

சென்னை: வரும் ஆகஸ்ட் 12-ம் தேதிக்குப் பிறகு முதல்வரைச் சந்திக்க விஜய்க்கு நேரம் ஒதுக்குவார் முதல்வர் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு சுதந்திர தினத்தில் தலைவா படம் வெளியாகக் கூடும் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். தமிழகம் மற்றும் புதுவையில் இன்று வெளியாக இருந்த தலைவா ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிக்கெட் புக் செய்தவர்களுக்கான கட்டணங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வருகிறது.

தலைவா இன்று தமிழ்நாட்டில் வெளியாகாத நிலையில், விஜய்யின் தீவிர ரசிகர்களோ கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்குச் சென்று படம் பார்க்கின்றனர். 'தலைவா' படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்திருந்ததால் வரிவிலக்கு குழுவினருக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தினைப் பார்த்த அதிகாரிகள் வரிவிலக்கு அளித்தாலும், விஜய் பேசும் சில வசனங்களுக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று காலையும் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், கொடநாட்டில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதா திரும்பும்வரை 'தலைவா' வெளியாக வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி அன்று கொடநாட்டில் இருந்து சென்னை திரும்பும் ஜெயலலிதாவைச் சந்திக்க, 'தலைவா' படக் குழுவினர் அனுமதி கேட்டுள்ளனர். அந்த சந்திப்பு நடந்த பிறகுதான் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. அநேகமாக ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின ஸ்பெஷலாக இப்படத்தை வெளியிடுவார்கள் என பெரும்பாலான தியேட்டர் உரிமையாளர்கள் நம்மிடம் தெரிவித்தனர்.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/08/thalaivaa-on-aug-15-180924.html
 
நான் என்ன பாவம் செய்தேன்... என் மகனுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்குது! - எஸ்ஏசி

சென்னை: நான் என்ன பாவம் செய்தேன்.... என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும், என தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர்காரர்களிடம் எஸ்ஏ சந்திரசேகர் வாய்விட்டுப் புலம்பியுள்ளார். தலைவா படத்துக்கு வந்துள்ள நெருக்கடி விஜய் மற்றும் அவரது தந்தையை நிலைகுலைய வைத்துள்ளன. தலைவா படம் உலகமெங்கும் வெளியாகிவிட்டாலும், விஜய்யின் சொந்த மாநிலமான தமிழகத்தில் மட்டும் எவ்வளவோ முயற்சி செய்தும் வெளியாகாமல் போய்விட்டது. முன்பு கமல்ஹாஸனின் விஸ்வரூபத்துக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டது. ஆனால் தனக்கேற்பட்ட நிலையை தொடர்ந்து மீடியா மற்றும் மக்கள் முன் எடுத்துச் சொல்லி, நீதிமன்றம் போய் தீர்த்துக் கொண்டார் கமல். ஆனால் நடிகர் விஜய் அல்லது இயக்குநர் விஜய் அல்லது படத்தின் தயாரிப்பாளர் யாருமே குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களைக் கூட சந்தித்து நிலைமையைச் சொல்ல முடியாத சூழல். முன்பு கமலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதே திரையுலகம் இப்போது மவுனம் காக்கிறது. அரசியல் பின்னணியில் ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும், தன் மகனுக்கும் அவர் படத்துக்கும் இப்படி ஒரு நிலை வந்தது அப்பாவாக மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்துக்கு இப்போதும் தலைவராக உள்ள எஸ்ஏ சந்திரசேகரனுக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. தமிழ் சினிமாவில் சர்வ பலம் பொருந்தியதாக, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் முதலாளிகளின் அமைப்பாக இருக்கிற தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரால் தன் மகன் படத்தையே சிக்கலின்றி வெளியிட முடியவில்லையே என்ற பேச்சு கடந்த ஒரு வாரமாக வெளிப்படையாகவே ஒலித்து வருகிறது. அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில், "நான் என்ன பாவம் செய்தேன், என் மகனுக்கு ஏன் இத்தனை மனக்கஷ்டம் வரவேண்டும்?" என்று சக தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடம் சொல்லி வருந்தியுள்ளார். இவ்வளவு பிரச்சினைக்கும் எஸ்ஏ சந்திரசேகர் பேசியதாகக் கூறப்படும் சில விஷயங்களே காரணங்களாகக் கூறப்படுகிறது. தன்னை அண்ணாவுக்கும் தன் மகன் விஜய்யை எம்ஜிஆருக்கும் ஒப்பிட்டு எஸ் ஏ சந்திரசேகரன் பேசியதற்கான ஆதாரங்களை மேலிடத்தின் கவனத்துக்கு திரையுலகைச் சேர்ந்த சிலரே கொண்டு போயுள்ளனர். அடுத்து தலைவா படத்துக்கு வந்த சிக்கல்களைப் பார்த்து, "எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வராத சோதனையா... இதுவும் அப்படித்தான்," என்று கமெண்ட் அடித்ததாகவும் கூறப்படுகிறது.

Read more at: http://tamil.oneindia.in/movies/news/2013/08/sa-chandrasekaran-worries-on-his-son-180920.html
 
Vijay Fan Comment.


Vijay fan
• 5 hours ago

எனக்கு விஜய் பிடிக்கும், ஆனால் இந்த படம் அவருக்கு உரியதில்லை. படம் முடிவதற்கு முன்னாடியே தியேட்டர் காலி ஆகிடுச்சு. பாட்ஷா & நாயகன் படத்த ரீமேக் பண்ண தெரியாம கொழப்பி அடிச்சு கொலை செஞ்சுட்டாங்க. இந்த படத்துக்கு சுறா எவ்வளவோ மேல். விஜய்க்கு இந்த படம் கை கொடுக்காது.
 
தலைவா படம் தாமதம்: போலீசுக்கு தொடர்பில்லை என டி.ஜி.பி., விளக்கம்

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள தலைவா படம் தமிழகத்தில் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளித்தால் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். படத்தை வரிவிலக்கு குழுவினருக்கு படத்தை படக்குழுவினர் திரையிட்டு காட்டியுள்ளனர். ஆனால் அக்குழுவினர் சில காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு ஆட்சேபடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் படம் வெளியாகவில்லை. கர்நாடகம், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள், மும்பை மற்றும் வெளிநாடுகளில் படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் குறித்து தமிழக டி.ஜி.பி., ராமானுஜம் வெளியிட்ட அறிக்கையில், தலைவா படம் வெளியாவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்திற்கு போலீசுக்கு பங்கு இல்லை. படம் வெளியாவதை தள்ளி வைக்குமாறு தமிழக போலீசார் கோரவில்‌லை. தமிழக போலீஸ் எந்தவித ஆலோசனை கூறவில்லை என கூறியுள்ளார்.
 
பரத் நடித்த ஐந்து ஐந்து ஐந்து படம் நாள‌ை வெளியாகிறது

சொல்லாமலே, டிஷ்யூம், பூ படங்க‌ை இயக்கியவர் சசி. இவரது இயக்கத்தில் பரத் நடிக்கும் படம் ஐந்து ஐந்து ஐந்து. இப்படம் கடந்த ஒன்றரை வருடங்களாக தயாராகி வந்தது. இப்படத்தில் பரத்துடன் மிருத்திகா மற்றும் புதுமுகங்கள்நடித்துள்ளனர். இம்மாதம் 15ம் தேதி வெளியாக இருந்த இப்படம் நாளை (ஆக.10ம் தேதி) வெளியாகிறது
 
Back
Top Bottom