HOUSE-MD
Contributor
- Joined
- 16 Oct 2012
- Messages
- 3,195
- Reaction score
- 1,209
களத்தில் குதித்தனர் கேபிள் ஆபரேட்டர்கள் : 18ம் தேதி முதல் டிஜிட்டல் ஒளிபரப்பு துவக்கம்.
=-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-=
=-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-==-=
சென்னை: கேபிள் ஆபரேட்டர்கள் இணைந்து, கூட்டுறவு முறையில், சென்னை மாநகரில் எம்.எஸ்.ஓ.,வை, தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் துவங்கியுள்ளது. இம்மாதம், 18ம் தேதி முதல், செட்-டாப் பாக்ஸ் வழியாக, டிஜிட்டல் ஒளிபரப்பை அளிக்கின்றனர்.
சென்னை மாநகரில், டிஜிட்டல் முறையில், கேபிள் ஒளிபரப்பை செய்ய வேண்டும் என, மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசு கேபிள், "டிவி' நிறுவனத்துக்கு, டிஜிட்டல் உரிமம் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தனியார் கார்பரேட் நிறுவனத்தின், பிடியிலேயே கேபிள் ஒளிபரப்பு சென்றுவிடும் நிலை ஏற்பட்டது. தனியார் கார்பரேட் நிறுவனத்துடன், இணைய விரும்பாத, தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர் சங்கத்தினர், 500 கேபிள் ஆபரேட்டர்கள் இணைந்து, கூட்டுறவு முறையில், தமிழ்நாடு கேபிள் கம்யூனிகேஷன் என்ற எம்.எஸ்.ஓ.,வை, அமைத்துள்ளனர்.
நவீன தொழில்நுட்ப வசதியுடன் துவங்கப்பட்டுள்ள எம்.எஸ்.ஓ., மூலம், கேபிள் ஆபரேட்டர்களுக்கு சிக்னல்களை வழங்கி, டிஜிட்டல் ஒளிபரப்பை வழங்குகின்றனர். இதற்கான அறிவிப்பு, சென்னையில் நேற்று நடைபெற்ற, தமிழ்நாடு கேபிள் ஆபரேட்டர்கள் சங்க கூட்டத்தில் வெளியிடப்பட்டது. இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் சகிலன் கூறியதாவது:
டிஜிட்டல் உரிமம் இல்லாமல், சென்னை மாநகரில், "டிவி' ஒளிபரப்பை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆபரேட்டர்களை இணைந்து எம்.எஸ்.ஓ., அமைத்து, டிஜிட்டல் உரிமம் பெற்று ஒளிபரப்பை துவங்குகிறோம்.
இம்மாதம், 18ம் தேதி முதல், தமிழ்நாடு கேபிள் கம்யூனிகேஷன் மூலம், டிஜிட்டல் ஒளிபரப்பை சென்னையில் அளிக்கிறோம். முதல்கட்டமாக, 3.50 லட்சம் செட்-டாப் பாக்ஸ்களை சென்னை மாநகரில் வழங்குகிறோம்.
சென்னை நகர் முழுவதும் எங்களது ஒளிபரப்பு கிடைக்கும். செட்-டாப் பாக்ஸ் விலை, 1,350 ரூபாயிலிருந்து, 4,000 ரூபாய் வரை. ஒரு பகுதியில் வாங்கிய எங்களுடைய செட்-டாப் பாக்சை, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் பயன்படுத்தலாம்.
கேபிள் தொழிலில், 23 ஆண்டுகளாக இருக்கும் ஆபரேட்டர்களை காப்பாற்றுவதற்காகவும், கடைகோடியில் இருக்கும் ஆபரேட்டர்களுக்கு சிக்னல் கிடைப்பதற்காகவும், எம்.எஸ்.ஓ.,வை துவங்கியுள்ளோம். அரசு கேபிள் நிறுவனத்துக்கோ, பிற நிறுவனங்களுக்கோ நாங்கள் எதிரி அல்ல. எங்களது முயற்சியை, தமிழக அரசு ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு, சகிலன் கூறினார்.
==
Important points:
STB and DAS from 18 Jan 2013.
500 LCO currently as members.
3.50 lakhs STB in Chennai in first phase.
Service to be available in entire Chennai.
STB to cost from Rs 1,350 to 4,000.
STB once got can be used anywhere in the State of TN.
==
Ref: Digtial telacase begins 18 : cable operators | களத்தில் குதித்தனர் கேபிள் ஆபரேட்டர்
==
Lets discuss the fate of DAS in Chennai and SCV.