‘‘இதில் அவருக்கு மூணு கேரக்டர்கள். அதில் ஒண்ணு வில்லன். ‘ஆத்ரேயா’ங்கிற அந்த வில்லன், சாதாரண ஆள் கிடையாது, செம டெட்லி வில்லன்.
அந்த கேரக்டரை அவ்வளவு நேசிச்சு அழகா பண்ணியிருக்கார். ‘சினிமாவில் வில்லனா நடிச்சா, இப்படி ஒரு வில்லனாதான் நடிக்கணும்’னு சொன்னார். சூர்யா சாரோட சினிமா வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, ‘ஆத்ரேயா’ கேரக்டர் நிச்சயம் பேசப்படும். ‘ ‘24’ படம் பேரே வித்தியாசமா இருக்கே?’’ ‘‘ ‘ஏன் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன்’னு இடைவேளைக்கு அடுத்து வரும் காட்சிகள் புரியவைக்கும்.
ஸ்கிரிப்ட்டின் மெயின் லைனே இந்த ‘24’ மேல்தான் டிராவல் ஆகுது. சூர்யாவிடம் கதை சொல்ல ஆரம்பிக்கும்போதே, ‘இந்த ஸ்கிரிப்ட்டின் தலைப்பு 24’ னு சொன்னேன். ‘முதல்ல கதை சொல்லுங்க. தலைப்பு பற்றி அப்புறம் பேசுவோம்’னு சொன்னார். கதை கேட்டு முடிச்சதும், ‘இந்தக் கதைக்கு ‘24’ தான் பொருத்தமான தலைப்பு’னு சொன்னார்.