Chennai DAS VS Analogue Confusion.

HOUSE-MD

Contributor
Joined
16 Oct 2012
Messages
3,195
Reaction score
1,209
நாளை கிடைக்கும் டிஜிட்டலா....? இன்றைய அனலாக்கா...? குழப்பத்தில் சென்னை சந்தாதாரர்கள்...!!

======================================================

சென்னையின் தற்போதைய கேபிள் டிவி வணிகத்தின் நிலை என்னவென்றால் பல லட்சகணக்கான சந்தாதாரர்களுக்கு ஒரு குழப்பமான நிலையை ஏற்படுத்துவதாக உள்ளது... மேலும் கடைகோடி கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை புதைகுழியில் தள்ளுவது போன்ற ஒரு நிலையும் தற்போது நீடித்து வருகிறது.

இதே நிலைதான் இனி நிரந்தரமாக நீடிக்குமா ...? அல்லது தற்சமயம் என்பது போல் காணப்படும் டிஜிட்டலாக்க மாற்றத்தின் தற்காலிக வெளிப்பாடா....? என யாரும் அறுதியிட்டு கூறமுடியாத நிலையில் உள்ளனர்...

இன்னும் வெளிப்படையாக கூறப்போனால் இந்த திரிசங்கு நிலைக்கு தொழில்துறையில் உள்ள யாரும் பொறுப்பேற்கவும் விரும்பவில்லை...

இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தாமதப்படுத்தி அமல்படுத்திய...டிஜிட்டலாக்கம், அதாவது அனலாக் சிக்னல் முறையில் இருந்து செட் டாப் பாக்ஸ் பெட்டி (STB)வைத்து டிஜிட்டலாக்க (DAS) அமைப்பு முறைக்கு காட்டயமாக மாறுவது.... இந்த டிஜிட்டல் மாற்றம் சென்னை ஆபரேட்டர்கள் மற்றும் சந்தாதாரர்களிடையே ஒரு பெரிய பிளவை ஏற்படுத்திவிட்டது என்பதே தற்போதைய நடைமுறை உண்மை. டிஜிட்டல் சந்தாதாரகள் Vs அனலாக் சந்தாதாரகள் என்ற நிலைமைக்கு தள்ளிவிட்டது.

ரூ. 100 சந்தாவில் மக்கள் விரும்பும் பிரபல சேனல்கள் மற்றும் புகழ் பெற்ற தமிழ் சேனல்களை பார்க்க வேண்டும் என்றால் ஒரு DAS டிஜிட்டலாக்க இணைப்பு பெற வேண்டும்.... ஆனால் அதே ரூ. 100 சந்தாவை செலுத்தி வரும் லட்சகணக்கான சந்தாதாரர்களுக்கு கிடைப்பதோ பெயருக்கு சில சேனல்கள் அடங்கிய ஒரு டஜன் சேனல்களே காட்டபடுகின்றன... அதிலும் சில சேனல்கள் DTH பைரசியில்.

100 மேற்பட்ட டிஜிட்டல் சேனல் பார்ப்பவர்களும்... 20�-30 சேனல்களை அனலாகில் பார்பவர்களுக்கும் ஒரே சந்தாதொகையா....? என கேள்விகள் எழத்துவங்கியுள்ளன... இதற்கு தீர்வு காணும் முயற்சியில் கடைகோடி ஆப்ரேட்டர்கள் ஒருபுறம் இருந்தாலும், அரசின் சட்ட திட்டங்கள் அதற்கு சரியான பாதை அமைப்பனவாக இல்லை.. இந்த விஷயம் சாதாரண ஒரு சந்தாதாரருக்கு தெரிய வாய்ப்பில்லை... அவர்கள் தங்களுடைய வேட்கையை பூர்த்தி செய்வதற்கு தற்போது அவர்களுக்கு இருக்கும் ஒரே வழியாக இருப்பது DTH மட்டுமே..

"எங்கள் பகுதியில் பக்கத்தில் உள்ள நபர்கள் STB இணைப்பு பெற்று ரூ 100 மட்டுமே செலுத்தி 100 க்கும் மேற்பட்ட சேனல்களை பெறுகின்ற போது, நாங்கள் வெறும் 12 பிரதான சேனல்களைக கூட சரிவர பெற முடியாத நிலையில் உள்ளோம்," என்று STB க்கு மாறாத ஒரு புரைசவாக்கம் பகுதி ஆப்ரேட்டரின் அனலாக் சந்தாதாரரின் புலம்பல் இது.

பல வீடுகள் டிஜிட்டலாக்கம் என்னும் STBக்கு மாறும் அதே வேளையில், பெரும்பாலானோர் பலர் டிஜிட்டல் முறைக்கு மாறுவது பற்றி ஒரு குழப்பத்தில் உள்ளனர். இதை பயன்படுத்தி ஒரு சில DTH நிறுவனங்கள் எங்களிடம் அனைத்து தமிழ் சேனல்களும் உள்ளன என்ற விளம்பரங்களை அள்ளி தெளித்து அவர்களை தடுமாறவும் தடம் மாறவும் செய்கிறது.

"நாங்கள் இன்னும் தரமான சிக்னல்களை பெறுவதில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளது என்று கூறியவர் அவரது அண்டை வீட்டார் SCV STBயை திருப்பி கொடுத்த அனுபவத்தின் சாட்சியாக உள்ளவர் தற்போது அனலாக் முறையை தொடர்கின்றார்," என பெரம்பூரில் உள்ள ராமகிருஷ்ணன் தெருவில் இருந்து மற்றொரு சந்தாதாரர்.

இருப்பினும், கேபிள் சந்தாதாரர்கள் பெரும்பான்மையானவர்கள் TRAI கூறிய அனலாக் ஒளிபரப்பு நிறுத்தப்படும் என்ற கட்டாய நிலை உள்ளதால், STB யா? அல்லது DTH ...? என்பதை தீர்மானிக்கப்படாத நிலையில் உள்ளனர்.

அவர்களுக்கு தேர்ந்தெடுப்பதற்கு தற்போது DTH ம் ஒரு எளிய நடையாக உள்ளது என்பதே கடைகோடி ஆப்ரேட்டர்களின் கவலையாக உள்ளது...

நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு STB யும் DTH ம் மிகவும் விலையுயர்ந்தவையாகத்தான் தெரிகிறது... ஆனால் அவர்களையும் உள்ளடக்கியதுதான் சென்னையின் TRP/TVT....

இதற்கு என்ன வழி என்பதை ஆராய்வதே தற்போதைய மீடியா நிபுணர்களின் வேலையாக உள்ளது.

சென்னையில் தற்போது கொடுக்கப்படும் அனலாக் முறையில் அனைத்து தமிழ் சேனல்களும் கொடுக்கபாட்டால் ஒரு வேலை... இது போன்ற DTH இன் தாக்கத்தை குறைக்கலாம் என்றும்... மேலும் சென்னையில் எப்போது டிஜிட்டலாக்கம் முழுமையடையும் என்பது யாருக்கும் தெரியாது.... தற்போது உள்ள ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியில் STB விலையும் DTH பாக்ஸ் விலையும் ஏறக்குறைய ஒரே தொகையாகக்கூட மாறலாம்...என்று கூறியவர்....அனலாக் சேனல்கள் அதிகரிக்கும்போது புதியவர்கள் ஆப்ரேட்டர்களாவது கூட தடுக்கப்படலாம் எனவும் தெரிவித்தார் பெயர் வெளியிடவிரும்பாத சென்னையின் மீடியா நிபுணர் ஒருவர்.

==

Source: :: TN Television :: Cable || Tv || Cable tv || Local Channel || News Tamil || Local Channel News Tamil || Tamil Cable Tv News || Local Channel News in...

==

Eng Translation: The status of DAS in chennai is nothing but 0%, due to the recent depreciation of rupees chennai people think that DAS STB price will become equal to DTH STB price so why not move to DTH where there is much freedom and no monopoly and can watch all channels.

Also current analogue in chennai under SCV has a max of 30 - 40 (just 12 primary channels which are mainly from Sun network and any competitors channels would be immediately removed) channels whereas in DAS (TCCL and JAK) people have the choice to watch more channels for almost the same price of SCV Analogue, so people are highly disappointed and this has created a venue for DTH operators to land in and make people opt for DTH which is a huge loss for the LCO.

Even on SCV DAS the picture quality is poor and several users are returning their SCV STB and moving back to Analogue, also SCV DAS too has fewer popular channels (mostly SUN Network channels fill the space).

So the only way LCO's to manage the situation and prevent users from moving to DTH is for them to offer all the tamil channels under analogue (which SCV will never do). So mostly the LCO's would start to give more analogue channels taken from either DAS or through DTH piracy to prevent people from migrating to DTH.
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock