விலகும் விளம்பரதாரர்கள்!!!
புதிதாக தொடங்கிய சேனல் அது. தொடங்கியதிலிருந்தே சரியாக போனியாகவில்லை. விளம்பரதாரர்களும் எவ்வளவு நாள்தான் பொறுப்பார்கள். மூன்று பெரிய நிறுவனங்கள்தான், போக வழி தெரியாத அந்த டவுன் சேனலுக்கு கொடுத்துவந்த விளம்பரங்களை பொங்கலுடன் ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். ஒவ்வொரு சேனலில் ஒவ்வொரு நிகழ்ச்சி சரியில்லை என சொல்ல கேட்டிருப்போம்.இந்த சேனலில் எல்லாமே தேவையில்லாத புடுங்குற ஆணிதான் என்று நேயர்கள் சொல்ல கேட்கும்போது வருத்தமாகத்தான்இருக்கிறது. மார்கெட்டு போன நடிகைகளுக்கு லட்சங்களில் சம்பளம், மேக்கப் இத்யாதி என பலவாறாக செலவழித்துவிட்டு இப்போது பேந்த பேந்த முழித்துக்கொண்டிருக்கிறார்கள்.இனி சேனலை தூக்கி நிறுத்துவதற்கு ஒரு சரியான ஆளை விரைவில் எடுப்பார்கள் என நம்பப்படுகிறது.காத்திருப்போம்.