RE: Does Arasu really wants to serve Chennai??
சென்னை : வடிவம் மாறும் Non-ஆப்ரேட்டர் பிரச்சினை..!!
===============================================
சென்னையில் அரசு கேபிள் டிவி சேவை ஆரம்பித்து ஏறக்குறைய ஒரு ஆண்டு ஒரு மாதம் முடிவடைந்துள்ளது... தொடக்கத்தில் வேகம் காட்டி தங்களை பதிவு செய்து கொண்ட ஆப்ரேட்டர்கள்... நாட்கள் செல்ல செல்ல, அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு டிஜிட்டல் லைசென்ஸ் கிடைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல் காரணமாகவும் மற்றும் தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், தகவல் அமைச்சகம் மேலும் நிலுவையில் உள்ள சில வழக்குகள் காரணமாகவும்... மேலும் அரசு கேபிள் டிவியின் சென்னை டிஜிட்டல் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற காரணங்களால் பொதுமக்கள் மற்றும் ஆப்ரேட்டர்களின் மனதில் இருந்து அரசு கேபிள் டிவி மெல்ல மெல்ல மறைய தொடங்கியது...
சென்னையில், அரசு கேபிள் டிவி நிறுவனமும் அதன் சேவையை எந்த ஒரு குறிகோளும் இல்லாமல் எதோ ஒரு கட்டாயத்திற்கு நடத்த வேண்டிய நிலையில் இருந்தது.
மற்ற பகுதிகளுக்கு ஆன் லைன் கட்டணம் உள்ளிட்ட பல மாறுதல் சீர்திருத்த திட்டங்களை, பொதுமக்களுக்கு நேரடியாக கொண்டு வந்த அரசு கேபிள் டிவி நிறுவனம்... சென்னை(டிஜிட்டல்) மக்களிடம் மட்டும் ஏனோ தயக்கம் காட்டியது... அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை டிஜிட்டல் சேவையா அல்லது அனலாக் சேவையா என்பதை வெளிப்படையாக தெளிவாக்க மறந்துவிட்டது என்று தான் சொல்லவேண்டும்...!! அந்த மறதியும் இன்று வரை தொடர்கிறது...!!
ஆனால் அந்த மறதிதான் இன்று வளம் கொழிக்கும் தொழிலாக மாறியுள்ளது...!! சென்னையில் அரசின் அனலாக் சிக்னலை வைத்து non-ஆப்ரேட்டர் உருவாக்குதல் என்ற பெயரில் பக்கா பிஸ்னஸ் நடந்து வருகிறது என்று பெயர் வெளியிடவிரும்பாத ஒரு சென்னை ஆப்ரேட்டரின் கருத்து...!!
சிறிய ஆப்ரேட்டர்களின் இணைப்புகளை non-ஆப்ரேட்டர் என்ற பெயரில் அபகரிப்பதில் தொடங்கிய இந்த வணிகம்... தற்போது நேரடியாக பெரிய ஆப்ரேட்டர்களை மட்டுமே குறிவைத்து நடைபெற்று வருகிறது எனவும் கூறினார்.
இது முழுக்க முழுக்க பேரத்திற்காக மட்டுமே நடைபெறுகிறது என்பதையும் கூறினார்.
இது பேரத்திற்காக மட்டும்தான்... சென்னையில் உள்ள அரசு அனலாக் சிக்னலை பயன்படுத்துகின்றனர்.. என்று கூறியவர்... அதற்கான காரணத்தையும் தெரிவித்தார் ...ஏனெனில் அதில் தான் எந்த ஒரு முதலீடும் இல்லை எனவும்... non-ஆப்ரேட்டர்களை உருவாக்குபவர்கள்... ஏன் அவர்கள் டிஜிட்டல் சிக்னலை கொண்டு உருவாக்குவதில்லை...? என்ற அவர் அதில் உள்ள உண்மையை தெளிவாக்கினார்....!!
ஏன் அப்படி..? எனக் கேட்டதற்கு.... அரசு டிஜிட்டல் சிக்னல் என்றால் முதலில்... அவர்கள் பெரும் தொகை முதலீடு செய்ய வேண்டும்... மேலும் பொதுமக்களிடம் சென்று அவர்கள் இந்த டிஜிட்டல் இணைப்பு சிக்னலை எடுத்துகொள்ளும்படி மார்கெடிங் செய்ய வேண்டும்....பொதுமக்களை செட் டாப் பாக்ஸ் வாங்க நேரடியாக நிர்பந்திக்க முடியாது... மேலும் அது அவர்களுக்கு மிகவும் கடினமான வேலையும் கூட...!! என்று கூறியவர் அப்படியே செய்ய முன்வந்தாலும் லைசென்ஸ் பற்றி பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை...!!
இவை அனைத்தையும் மனதில் கொண்டு இருக்கும் அனலாக் சிக்னலை கொண்டு சென்னை சூழ்நிலையை சாதகமாக்கி இதை செய்து வருகின்றனர் எனவும் கூறினார்.
அரசு கேபிள் டிவியின் டிஜிட்டல் சேவையை, செட் டாப் பாக்ஸ் பெட்டிகளை... பொதுமக்கள் விரும்பினால் அவர்களே தங்கள் ஆப்ரேட்டர்களை தொடர்புகொள்வர்... சென்னை மக்களுக்கு அரசு தனது டிஜிட்டல் சேவையை உண்மையிலேயே கொடுக்க விரும்பினால்... ஒரே ஒரு விளம்பரத்தை... வெளிப்படையாக கொடுத்து சாதிக்கலாமே...!! அதை விடுத்து ஆப்ரேட்டர்களிடம் செட் டாப் பாக்ஸ் திணிப்பது என்பது ஒரு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக... அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேற்கொள்ளும் ஒரு சம்பிரதாய நடவடிக்கையாக மட்டுமே தெரிகிறது.
சென்னை மக்களுக்கு, டிஜிட்டல் சேவையை பற்றி ஞாபகமும் இல்லை.. அனலாகும் மறந்து விட்டது... என்ற திரிசங்கு நிலையில் உள்ளனர்...!!
==
Eng Translation:
One year after the starting of Arasu cable in Chennai it is still visible that Arasu is treating Chennai completely different from the other cities.
While offering Analogue service in other parts of TN and new customer beneficial services like online subscription payment system, Arasu still seems to be not interested in serving the Chennai people.
Also Arasu seems to include Chennai to their list just for name sake without any plans nor interest in the same.
Chennai people now have become totally ignorant about Digital (DAS) service and have also completely forgotten what is an Analogue service is and are in a Limbo and don't know what the future of the Cable TV service in Chennai.
==
Source:
TN Television