Arasu cable tv Launched WebSite

pearlpearl said:
Except movies now, sony pix and AXN i never saw any other English movie and entertainment channels for a very long time all due to some selfish people. :-/

Hope someone makes some good change sooner. :huh

Yes, Arasu can definitely do a lot to help the Chennai people. :sp :sp

If you see thiruvallur dist channels list in tntelevision.com, I'm getting channels in viewable manner upto Sony PIX for 100Rs from that list.:u
Whereas in chennai, scenario is completely opposite by SCV..
Whoever may come as MSO in chennai but SCV should be dethroned..:wall
 
aravindan said:
If you see thiruvallur dist channels list in tntelevision.com, I'm getting channels in viewable manner upto Sony PIX for 100Rs from that list.:u
Whereas in chennai, scenario is completely opposite by SCV..
Whoever may come as MSO in chennai but SCV should be dethroned..:wall

Same here, upto sony pix i can all channels in viewable quality.

Vijay TV is starting "Mahabaaratham" in a few days, SCV might think this as a competition to sun tv's "Mahabaaratham" and could remove vijay tv soon.

Any MSO making a mockery of the people and forcing a huge population to watch only their choice of channels has to be thrown out as early as possible.
 
aravindan said:
Lets see what happens in Chennai's Digtal MSOs meet on 3rd Oct...
Arasu cable chairman will also participates in that meet..:)

Any information abt the meeting of chennai digital MSO's...Waiting for the UPDATE...
 
dinee said:
Any information abt the meeting of chennai digital MSO's...Waiting for the UPDATE...

No update, me too waiting.

But im sure about one thing, both the LCO and MSO will never discuss about people or their clients welfare, all they would discuss only about,
1: how to stop people from moving to DTH.
2: how to stop new players from entering into cable tv business.
3: how to get more income without improving the signal quality or doing any good to the people who pay for it.

It would be a great surprise if they discuss even a single point about the people and doing good for the people.
 
Looks like the yesterday's meeting has been conducted just to prevent Arasu cable from entering Chennai. :huh :huh


These LCO's wont go with Arasu and even if Arasu wants to enter Chennai these LCO's will complain that they are stealing their subscribers. :wall :wall :angry :angry

1: How can someone steal your business or subscriber if you are providing quality and people friendly service?
2: You want to play solo, never consult with people when subscribing to an MSO, the MSO removes channels without notice and spoils people mood, you don't object or do something to give the people the channels or move to another MSO and you still want the people to be with you?

People definitely need to get out of this mess and hope DTH becomes affordable (please someone don't comment that it will never become affordable, a lots of products considered to be luxurious and costly are now at rock-bottom price and sure in future DTH too will join the league) and these so called monopolist LCO's and MSO's cease to exist.
 
Last edited by a moderator:
�சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் டிவியின் முதல் மாநாடு � சிறப்பம்சங்கள்...!!


சென்னையில் 3 ஆம் தேதி நடைபெற்ற �சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் டிவியின் முதல் மாநாடு, கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர் - தலைவர் திரு.பா. கருணாநிதி அவர்களின் உரை...

கேபிள் டிவி தொழில் சந்திக்கின்ற பல பிரச்சினைகளில், இன்றைய தினத்தில், சென்னை கேபிள் ஆப்ரேட்டர்களின் இன்றைய தலையாய பிரச்சினையாக NON �ஆப்ரேட்டர் என்ற பிரச்சினை குறிப்பாக ஆளும்கட்சியை சேர்ந்தவர்கள், சமூக விரோதிகளை துண்டிவிட்டு, கிட்டத்தட்ட 20 முதல் 24 ஆண்டுகாலமாக இந்த தொழிலை லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் தொழில் நடத்தகூடிய நமக்கு இன்றைக்கு மிகப்பெரிய பிரச்சினையாக NON �ஆப்ரேட்டர்களுடைய பிரச்சினை சென்னை நகரத்திற்கு வந்துள்ளது.

எனவேதான் இந்த பிரச்சினையை சாதிக்கக் கூடிய வகையில், சென்னை நகரத்தில் இருக்க கூடிய ஆப்ரேட்டர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சட்டபடியாகவும், அல்லது இயக்க ரீதியான ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவோ அல்லது பல்வேறு முயற்சியின் மூலமாகவோ எதிர்கொள்ளவேண்டியுள்ளது.... இதற்கு காரணம் அரசு கேபிள் ..!!. என குறிப்பிட்டவர்...

அரசு கேபிள் தரப்பில் பல முறை நேரில் சந்தித்து பேசுகையில்... அவர்கள் வெளிப்படையாகவே கூறிகின்றனர்.... ஆம், நாங்கள் தான் அதை (NON �ஆப்ரேட்டர் பிரிச்சினை) செய்கிறோம் என்று கூறுகின்றனர்...!!

இதன் காரணமாக இந்த பிரச்சினையை சந்திக்க கூடிய வகையில் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அடுத்தகட்ட நிகழ்ச்சியாக ...தற்போது முதல் மாநாட்டை நாம் கூட்டியுள்ளோம்....!! என தெரிவித்தவர் இதையொட்டி மாநாட்டின் சார்பாக அரசு கேபிள் டிவி சேர்மன் திரு. ராதா கிருஷ்ணன் அவர்களையும் அழைத்துள்ளோம் எனவும் கூறினார்.

மேலும் தமிழகத்தின் பிற பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆப்ரேட்டர்களுக்காக தொடர்ந்து பல்வேறு வகையில் இந்த தொழிலை பாதுகாப்பதற்கு, ஆப்ரேட்டர்களை பாதுகாப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்திருக்க கூடிய பல சங்கங்களின் தலைவர்களையும் அழைத்துள்ளோம்...!! எனவும் தெரிவித்தவர், மாநாட்டிற்கு வந்திருந்த சங்க தலைவர்களை வரவேற்று அறிமுகம் செய்தார்.


இது போன்ற பல பிரச்சினைகள் சென்னை மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாகவும் நாம் சந்தித்த தலைவர்கள் மற்றும் ஆப்ரேட்டர்கள் வாயிலாகவும் பல தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளது...!! என்ற தகவலையும் கூறினார்.

சென்னையை பொறுத்த அளவில், கேபிள் துறைக்கு சிறிதும் சம்மந்தம் இல்லாத வகையில் சில சமூக விரோதிகளை பயன்படுத்தி கொண்டு, கேபிள் டிவி தொழிலில் NON �ஆப்ரேட்டர்களை உருவாக்குவது என்ற பிரச்சினை,தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது... !! எனக் கூறியவர்,

இதற்கு எதிராக சட்டபடியாகவும், பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும் முன்னெடுத்து செல்லும் அதே வேளையில், அரசு கேபிள் டிவியுடன் பேச்சுவார்த்தை செய்ய வேண்டியுள்ளது...!! எனத் தெரிவித்தவர்... இந்த இரண்டு மாதகாலத்தில் நாம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுக்கும் வேளையில், ஆளும்கட்சியை சேர்ந்த முக்கியமான நபர்கள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மேலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் உள்பட பலர், இது போன்ற காரியத்தில் ஈடுபடுகின்றனர், என கூறினார்...!!

அரசு கேபிள் டிவி தலைவர் அவர்களை இது குறித்து சந்தித்து பேசுகையில்... அவருக்கு இது போன்ற நிர்பந்தங்கள் பரிந்துரை அழுத்தங்கள் தொடர்ந்து வருகிறது என அவர் வெளிப்படையாகவே கூறுவதாக தெரிவித்தவர்...மேலும் அவருக்கு வந்த கடிதங்களை முதற்கொண்டு எடுத்து காட்டும் சூழ்நிலை தான் தற்போது அரசு கேபிள் டிவி மூலமாக சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது..!!

மேலும் கடிதங்களை அனுப்பும் ஆளும்கட்சியை சேர்ந்த பொறுப்பில் உள்ளவர்கள்... இன்னாருக்கு, இந்த பகுதிக்கு அரசு கேபிள் இணைப்பு கொடுக்கவும் என வெளிப்படையாகவே குறிப்பிட்டு பரிந்துரை கடிதங்களை கொடுத்துள்ளனர்...!! என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்...


கடந்த 5 மாதகாலமாக நடைபெற்று வரும் இந்த பிரச்சினை குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவித்து பேசாத நிலையில் தான் ... நாம் களத்தில் இறங்கி போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளனர்...

ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஒரு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம்... என நடத்திய உடன்... அரசு கேபிள் டிவி நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேசுகையில் முதல்வர் அவர்களுக்கு தெரியாமலே இது போன்ற காரியங்கள் நடந்து வருவதாக தமக்கு திட்டவட்டமான செய்திகள் வருவதாகவும் தெரிவித்தார்..

மேலும் போஸ்ட் ஆபிஸ் நிலையங்களில் இணைப்பு இல்லாதவர்களுக்கு... முறையில்லாமல் லைசென்ஸ் கொடுத்து வருகின்றனர்....எனவும் தெரித்தவர்...

இது போன்றவற்றை முறைபடுத்த வேண்டிய கடமை நம்மிடம் உள்ளது எனக் கூறியவர்... தபால் அலுவலகங்களுக்கு முன் ஓர் ஆர்ப்பாட்டம் நடத்தபடும் எனவும் தெரிவித்தார். கேபிள் தொழிலில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைகளில் இருந்து தொழிலையும் ஆப்ரேட்டர்களையும் பாதுகாக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் உள்ள ஆப்ரேட்டர்கள் எந்த விதமான கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மத மாச்சரியங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் மறந்து ஒதுக்கி ஒன்றிணையவேண்டும் எனவும், தமிழகம் முழுவதும் உள்ள ஆப்ரேட்டர்களை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என வலியுறுத்தி கூறினார்.

.இறுதியாக... தற்போது உள்ள ஒருங்கிணைப்பு குழுவை... ஒரு சங்கமாக மாற்றும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளதாகவும் கூறினார்.

புதிதாக பதிவு செய்யபடும் சங்கம்.... சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் என்ற பெயரில் பதிவு செய்யபடும் எனவும்... இது டிரஸ்ட் சட்டத்தின் கீழ் இல்லாமல் தொழிற்சங்க சட்ட அமைப்பின் கீழ் வரும் வகையில் இருக்கும் எனவும் தெரித்தார். .

முன்னாதாக TnTelevision இணையதளத்திற்கு அளித்த பேட்டியில்... ஏற்கனவே உள்ள சங்கங்களும், தற்போதைய புதிய சங்கமும் எங்கே முரண்படுகிறீர்கள் எனக் கேட்டதற்கு....

ஏற்கனவே உள்ள சங்கங்கள், கார்பரேட் MSO நிறுவனங்களாக மாற்றப்பட்டிருப்பதால்.... அவர்களால் ஒரு அளவிற்கு மேல் களத்தில் நின்று போராட முடியாத சூழ்நிலையில் உள்ளனர். அது போன்ற ஒரு நிலை எங்களுக்கு ஏற்பட வாய்ப்பு இல்லை எனவும் மேலும் எந்த ஒரு MSOவிடம் இருந்தும் சேனல்களிடம் இருந்தும் அன்பளிப்பு நன்கொடை போன்றவைகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம் எனத்தெரிவித்தார். .

புதிய சங்கத்தின் மூலம் தற்போது ஆப்ரேட்டர்களுக்கு எந்த மாதிரியான கிடைக்கும்...? எனக் கேட்டதற்கு

சென்னையில் இன்றை நிலையில் அனலாகை விடவும் முடியாமல், டிஜிட்டலை ஏற்கவும் முடியாத ஒரு நிலைதான் நிலவுகிறது... எனவே அனைத்து ஆப்ரேட்டர்களுக்கும் சாதகமான பாதுகாப்பான ஒரு சூழலை உருவாக்க கூடிய தீர்வை எட்டவேண்டும் என்பதே எங்களுடைய கொள்கை எனவும் தெரிவித்தார்.
 
சென்னையில் கடந்த 3 ஆம் தேதி, நடைபெற்ற சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் முதல் மாநாடு நடைபெற்றது..

மாலை 3 மணிக்கு தொடங்கப்படும் என தெரிவித்திருத்த மாநாட்டு கூட்டம்... சற்று தாமதமாக தொடங்கியது... மாநாட்டிற்கு வாழ்த்துரை வழங்க பல்வேறு சங்கங்களை சேர்ந்த சங்க தலைவர்கள் திரு. D.G.V.P. சேகர், திரு. கோவை யுவராஜ், திரு. கில்டு பாண்டி � மதுரை, திரு. தங்கராஜ் � திருப்பூர், திரு. சஞ்ஜீவகனி � விருதுநகர், திரு. சிவா � திருவள்ளூர், திரு. தனபால் � அரியலூர், திரு. நேரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரு. ராஜ சேகர ராவ் அவர்கள் வரவேற்புரை ஆற்றி தொடங்கிய மாநாட்டு கூட்டத்தில் திரளான ஆப்ரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் திரு. பா.கருணாநிதி அவர்கள் தலைமையில் நடந்த மாநாட்டு கூட்டத்தில்

சென்னை நகரில் நடைபெற்று வரும் NON-ஆப்ரேட்டர்கள் பிரச்சினை குறித்தும், தீர்வு காணும் விதத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும்... தபால் அலுவலகங்களில் முறைகேடான வகையில் லைசென்ஸ் கொடுப்பதை நிறுத்த வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது.

மேலும் ஒருங்கிணைப்பு குழுவாக இருக்கும் சென்னை மாநகர டிஜிட்டல் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கம் (CMDCOA) என்ற ஒரு அமைப்பு சங்கமாக செயல்படும் எனவும் தலைவராக திரு. பா.கருணாநிதி அவர்களும், பொது செயலாளராக திரு. L.R.ஸ்ரீநிவாசன் அவர்களும், பொருளாளராக திரு. நீலகண்டன் அவர்களும் ஏகமனதாக கரவொலி மூலம் தேர்ந்தேடுக்கபட்டனர்.

ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடுகள் பற்றி திரு. L.R.ஸ்ரீநிவாசன் அவர்கள் பேசுகையில்

கேபிள் என்கிற தொழிலை நாம் பிரசவிக்கும் காலம் முதல்... (சாதா பிரசவம் அல்ல அது ஆப்ரேஷன் தான்...) இன்று வரை நாம் பலதரப்பட்ட பிரச்சினைகளை சந்தித்து வந்துள்ளோம்...இன்றைக்கு நாம் கேபிள் தொழிலில் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் இரண்டு விதமானவை ஒன்று உடனடி ஆபத்து மற்றொன்று நீண்டகால ஆபத்து உடனடி ஆபத்து என்றால், இங்கே அரசு துறை அல்லது பிற MSO க்கள் உருவாக்குகின்ற NON ஆப்ரேட்டர் பிரச்சினை.

நீண்ட கால ஆபத்து என்றால் .... அதற்கு காலவரையறை சொல்ல இயலாத ஆபத்து, ஏனெனில் இன்று மத்திய அரசின் அணுகுமுறையோ அல்லது TRAIயின் அணுகுமுறையோ பார்க்கும் போது.... இந்த செட் டாப் பாக்ஸ் முறையோ அல்லது டிஜிட்டல் முறையோ மக்கள் மீது வைத்துள்ள அக்கறையின் விளைவாக கொண்டுவந்தது என்று யாரும் எண்ணிவிடவேண்டாம்....எனக் கூறி அதற்கான எடுத்துக்காட்டையும் கூறினார்(ஆங்கிலேயர்கள் ரயில் சேவையை கொண்டுவந்தது நமக்காக அல்ல அவர்கள் கொள்ளையடிக்கும் பொருட்களை எளிதாக கொண்டுசெல்வதற்காக ).... அன்றைக்கு அவர்கள் நன்மைக்காக கொண்டுவந்த பம்பாய் � தானே ரயில் சேவை போல்தான், இன்று அவர்கள் திணித்துள்ள டிஜிட்டல் சேவை... இதில் மிகப் பெரிய ஆபத்து உள்ளது... தொழில் நுட்ப வளர்ச்சியை நாம் மறுக்க முடியாது.... அதற்கான விழிப்புணர்வு வேண்டும்...எனக் கூறியவர்

மத்திய அரசு நேரடி அந்நிய முதலீடு என்பது... தற்போது கேபிள் டிவி துறையில் பகாசுர அந்நிய நிறுவனங்களை சிவப்பு கம்பளம் விரித்து... நமது வாழ்வாதாரத்தை கேள்விகுரியாக்கி நம்மை எல்லாம் வீட்டிற்கு அனுப்பும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது எனக் கூறியவர். வடஇந்தியாவில் ஒரு MSO நிறுவனம் சுமார் 690 கோடி அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளது....என்பது குறிப்பிடத்தக்கது எனக் கூறியவர், அந்நிய நேரடி முதலீடு வரும்பட்சத்தில் அவர்கள் விதிக்கும் சட்டதிட்டங்களுக்கும் கெடுபிடிகளுக்கும் நாம் உட்பட்டு தொழில் செய்யவேண்டிய அடிமைத்தனம் எதிர்காலத்தில் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறினார்...

நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால் இந்த நிலையை மாற்றலாம்... இந்தியாவில் கால்பத்தித்த வால்மார்ட் என்ற பன்னாட்டு பொருள் விற்பனை அங்காடியின் நிலை நம்முடைய வணிகர்களின் ஒற்றுமையால் இன்று கேள்விக்குறியாகியுள்ளது... எனவே நாம் இனி வரும் காலங்களில் நம் தொழிலை காப்பாற்றி கொள்ள ஒரு வரலாற்று நிர்பந்தமாகவே இன்றைய நிலை... ஒரு நீண்டகால பிரச்சினையாக உள்ளது..

அரசு நிறுவனங்கள் கேபிள் டிவி தொழிலில் இருந்தாதால்... மத்திய அரசின் அந்நிய நேரடி முதலீடு தடைபடும் என்ற உள்ளார்ந்த அர்த்தத்தின் காரணாமாகவே... அரசு கேபிள் டிவி லைசென்ஸ் தடுக்கபடுகிறது. எனவும் தெரிவித்தார்.


ஆனால் இங்கு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏறக்குறைய அக்கிரமம் தான் செய்து வருகிறது.... ஒரு கேபிள் ஆப்ரேட்டர் எவ்வளவு தான் கஷ்டபடுவார்கள்.... ஒரு பக்கம் ஆப்ரேட்டர்களால் தொடங்கப்பட்ட MSOக்கள், மற்றொரு புறம் அரசு கேபிள் டிவி....கொடுக்கும் non ஆப்ரேட்டர் பிரச்சினையை ஏற்படுத்தி தொழிலின் ஸ்திரத்தனமையை குலைக்கும் வகையில் சில சமூக விரோதிகளுக்கு இணைப்பு கொடுத்து ஆப்ரேட்டர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உள்ளது எனவும் தெரிவித்தார்.

இது ஒருபுறம் என்றால் மற்றொரு புறம் தபால் நிலையங்கள்... முறைகேடாக எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றாமல் கையூட்டு பெற்றுக்கொண்டு லைசென்ஸ் கொண்டுத்து விடுகின்றனர்... ஒருவர் லைசென்ஸ் பதிவு செய்யவேண்டும் என்றால் அவர்கள் எத்தனை ஆம்பிளிபயைர் வைத்துள்ளனர், எத்தனை தூர்தர்ஷன் சேனல்கள் ஒளிபரப்புகின்றனர் போன்ற பல தொழில்நுட்ப தகவல்களை தங்களது விண்ணப்பத்தில் கேட்டு பெறுகின்ற விதிமுறையை காற்றில் பறக்கவிட்டு யார் கேட்டாலும், கையூட்டு கொடுத்தாலும் லைசென்ஸ் என்ற நிலையில் செயல்படுகின்றனர்....

இதை எதிர்த்து நாம் மிகபெரிய அளவில் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தி நமது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டிய நிலையில் உள்ளோம். எனவும் கூறினார்.

மேலும் இனி வருங்காலங்களில், வங்கியில் உள்ளது போல் கணக்கு தொடங்கவேண்டும் எனில் ஏற்கனவே அக்கவுன்ட் வைத்துள்ளவரின் பரிந்துரை கையொப்பம் வேண்டும் என்ற நடைமுறை போல் தபால் அலுவலகங்களிலும் புதிதாக ஒருவர் கேபிள் டிவி சேவை தொழிலுக்கு லைசென்ஸ் எடுக்கவேண்டும் என்றால் ஏற்கனவே 5 -10 ஆண்டுகள் தொழில் செய்துவரும் ஆப்ரேட்டர்களின் பரிந்துரை கையொப்பம் வேண்டும் என்ற புதிய நடைமுறை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.





SOURCE: TN TELEVISION
 
prakash_Tv said:
after getting STB from ur LCO...tell me list of channels in arasu STB.

Righnow My LCO is showing the Arasu channels in Analogue mode and in Digital, Iam getting TCCL packages.My operator says in another week or 10days he will configure my set top box to get the feed from Arasu.
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock