KING OF OPENING "THALA" VEDALAM (100 cr+ with in 8 days)

  • Thread starter Thread starter sasitnj
  • Start date Start date
  • Replies Replies: Replies 335
  • Views Views: Views 32,606
vjyfpbG.jpg
 
சூப்பர் ஸ்டார் குட்புக் லிஸ்டில் எப்போதும் அஜித்திற்கு ஒரு தனி இடம் உண்டு. அஜித்திற்கு ஏற்பட்ட ஒரு பிரச்சனையின் போது கூட ரஜினி தான் தலையிட்டு தீர்த்து வைத்தார்.

இந்நிலையில் ரஜினி ரசிகர் ஒருவர் தான் வரைந்த ஓவியத்தை மலேசியாவில் உள்ள ரஜினியிடம் காட்டியுள்ளார்.

அப்போது அதில் தெரியாமல் அஜித் படமும் வர, ‘எங்க காட்டுங்க..'சூப்பர் கண்ணா, மாஸ் ஹீரோ’ என புகழ்ந்துள்ளார்.
 
அஜீத்தின் கடைசி 5 படங்களின் வசூல் நிலவரம்... உண்மையும் பொய்களும்!



அஜீத் படங்களுக்கு பெரிய ஓபனிங் உண்டு என சினிமாக்காரர்கள் சொல்கிறார்களோ இல்லையோ... அவர் படங்கள் வெளியாகும்போதெல்லாம் சில பத்திரிகைகள் எழுதுவது வழக்கம். இவர்கள் சொல்வது போல ஆரம்ப வசூல் அமோகமாக இருந்தாலும், நிலைத்து ஓடும் நாட்கள் எண்ணிக்கை குறைவுதான். வசூலும்தான். இதுவரை மங்காத்தா உள்ளிட்ட அஜீத்தின் எந்தப் படமும் ரூ 100 கோடியை வசூலித்ததில்லை என்பதே பாக்ஸ் ஆபீஸ் சொல்லும் உண்மை. அஜீத்தின் கடைசி 5 படங்களில் வசூல் விவரங்களைப் பார்க்கலாம்...

பில்லா 2
சக்ரி டோலட்டி இயக்கத்தில் வந்த பில்லா 2 அஜீத்தின் பெரிய தோல்விப் படங்களுள் ஒன்று. இந்தப் படத்துக்கும் ஆரம்ப வசூல் ஓஹோ எனப் புகழ்ந்து தள்ளினர் சிலர். ஆனால் படம் பெரிய நஷ்டம். ரூ 32 கோடிதான் வசூலானது. ஆனால் ரூ 60 கோடி வரை வசூலித்ததாக தவறான தகவல்களைப் பரப்பினார்கள்.

ஆரம்பம்

விஷ்ணு வர்தன் இயக்க, ஏ எம் ரத்னம் தயாரித்த இந்தப் படம் வெளியான சில தினங்களிலேயே ரூ 100 கோடி வசூலித்துவிட்டதாக பொய்த் தகவல்கள் பரவ, ஏ எம் ரத்னம் பெரும் சிக்கலுக்கு உள்ளானார். ரூ 50 கோடியில் தயாரான இந்தப் படத்தால் தயாரிப்பாளருக்கு பெரிய லாபமில்லை. அனைத்து வழிகளிலும் இந்தப் படம் வசூலித்தது ரூ 60 கோடிதான்!

வீரம்

கடந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். விஜயா நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ 52 கோடி. வசூலானது ரூ 45 கோடி. விஜயா நிறுவனத்துக்கு 7 கோடி ரூபாய் நஷ்டம் என்று தகவல் வெளியானது.

என்னை அறிந்தால்

கவுதம் மேனன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது இந்தப் படம். கலவையான விமர்சனங்கள். இதுவும் ஏஎம் ரத்னம் தயாரிப்புதான். ரூ 50 கோடி பட்ஜெட். பெரிய ஓப்பனிங் என்று கூறப்பட்டாலும், அடுத்த சில தினங்களிலேயே காலி அரங்குகளைப் பார்க்க முடிந்தது. ஆரம்பம் மாதிரியே இந்தப் படத்திலும் சில கோடிகள் தேறின தயாரிப்பாளருக்கு. மொத்த வசூல் ரூ 62 கோடி.

வேதாளம்

இந்தப் படம் தீபாவளிக்கு வெளியானது. வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்டது. அஜீத்தின் ரசிகர்கள் இந்தப் படம் மூன்றாவது நாளே ரூ 100 கோடியைத் தாண்டிவிட்டது என சமூக வலைத் தளங்களில் எழுதினார்கள். இன்று பத்தாவது நாளிலும் மீண்டும் ரூ 100 கோடியைத் தாண்டியது என எழுதியுள்ளனர். அடுத்த பத்தாவது நாளும் இதையே எழுதுவார்கள் போலிருக்கிறது. இந்தப் படம் வெளியான எட்டாவது நாளில் ரூ 57 கோடியை வசூலித்திருந்தது.
 
அஜித் சார் நல்லா இருக்கனும்- விநியோகஸ்தர்கள் வாழ்த்து(வீடியோ) - Cineulagam

அஜித் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வேதாளம் படத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். மழையிலும் குறையாத கூட்டம் என வசூல் அள்ளி வருகின்றது இப்படம்.

இந்நிலையில் சமீபத்தில் நம் சினி உலகம் நேயர்களுக்காக பேட்டியளித்த இயக்குனர் சிவாவிடம் படத்தின் வசூல் குறித்து கேட்டோம்.

இதில் இவர் பேசுகையில் ‘வசூல் எல்லாம் டெக்னிஷியன் கூறக்கூடாது, அவை தயாரிப்பாளர்கள் தான் கூற வேண்டும், எல்லோரும் ரூ 100 கோடி என்று கூறுகிறார்கள்.

இந்நேரம் அதையும் தாண்டி சென்றிருக்கும், மேலும், தொலைப்பேசியில் பேசிய அனைத்து விநியோகஸ்தர்களும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும், அஜித் சார் நன்றாக இருக்க வேண்டும்’என்று தான் கூறுகிறார்கள்’ என நெகிழ்ச்சியாக கூறினார்.
 
sasitnj said:
அஜித் சார் நல்லா இருக்கனும்- விநியோகஸ்தர்கள் வாழ்த்து(வீடியோ) - Cineulagam

அஜித் தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக வேதாளம் படத்தின் மூலம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளார். மழையிலும் குறையாத கூட்டம் என வசூல் அள்ளி வருகின்றது இப்படம்.

இந்நிலையில் சமீபத்தில் நம் சினி உலகம் நேயர்களுக்காக பேட்டியளித்த இயக்குனர் சிவாவிடம் படத்தின் வசூல் குறித்து கேட்டோம்.

இதில் இவர் பேசுகையில் ‘வசூல் எல்லாம் டெக்னிஷியன் கூறக்கூடாது, அவை தயாரிப்பாளர்கள் தான் கூற வேண்டும், எல்லோரும் ரூ 100 கோடி என்று கூறுகிறார்கள். Director Siva said other than producer all are telling movie got 100 c+ :D:D

இந்நேரம் அதையும் தாண்டி சென்றிருக்கும், மேலும், தொலைப்பேசியில் பேசிய அனைத்து விநியோகஸ்தர்களும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும், அஜித் சார் நன்றாக இருக்க வேண்டும்’என்று தான் கூறுகிறார்கள்’ என நெகிழ்ச்சியாக கூறினார்.
Nalla irukkanumnu sonnavan vasul solla marathuttan pola (all distributors all wishes ajith long live but they forget to tell about the movie collection to Director Siva :lol
 
Back
Top Bottom