Dinamalar slams Arasu Cable for damn slow progress.

HOUSE-MD

Contributor
Joined
16 Oct 2012
Messages
3,195
Reaction score
1,209
அரசு கேபிளின் ஆமை வேக பணிகள்.
=-==-==-==-==-==-==-==-==-==-==-==

சென்னை மாநகரில், தொலைக்காட்சி இணைப்புகளை டிஜிட்டல்
மயமாக்குவதற்கு, இன்னும்
மூன்று நாட்களே உள்ள நிலையில்,
30 சதவீத இணைப்புகளுக்கு கூட,
"செட் டாப்' பெட்டிகள்
வழங்கப்படவில்லை. சென்னையில்,
"அரசு கேபிள் வந்து விட்டது' என,
மக்கள் மகிழ்ந்த நிலையில், செட் டாப்
பெட்டிகள் வழங்குவதைக் கூட,
அரசு கேபிள் இன்னும் துவங்கவில்லை.

நாட்டில் உள்ள மாநகரங்களில், கேபிள் இணைப்புகளை டிஜிட்டல் மயமாக்க, பலமுறை கால நீட்டிப்பினை மத்திய அரசு வழங்கியது. இறுதியில், நவ., 1ம் தேதியன்று, அனைத்து இணைப்புகளையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என, கால நிர்ணயம் செய்தது.

சென்னையில், கேபிள் தொழிலில் தனியார் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்து வரும் நிலையில், இரு வாரங்களுக்கு முன், அரசு கேபிளின் கட்டுப்பாட்டு அறையை, முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார். "100 தொலைக்காட்சி சேனல்கள், 80 ரூபாய்க்கு வழங்கப்படும்' என்றும் அறிவித்தார்.
சென்னையில் அரசு கேபிள் வருவதன் மூலம், கேபிள் தொழில் உள்ள, "ஒரு நிறுவன ஆதிக்கம்' உடைக்கப்பட்டு, குறைந்த கட்டணத்தில் அதிகமான சேனல்கள் பார்க்கலாம் என, பொதுமக்கள் எதிர்பார்பார்த்தனர்.

ஆனால், அரசு கேபிளின் ஆமை வேக பணிகளால், தனியார் கேபிள் நிறுவனங்கள் வழக்கம் போல், தங்கள் நிலையை உறுதிப்படுத்தி வருகின்றன. சென்னையில் உள்ள, 20 லட்சம் தொலைக்காட்சி இணைப்புகளில், 25 ஆயிரம் இணைப்புகள் மட்டுமே, செட் டாப் பெட்டிகள் கொடுக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புகள் அனைத்தும், "சுமங்கலி
கேபிள் விஷன்' கட்டுப்பாட்டில் உள்ளவை என, கேபிள் ஆபரேட்டர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே, "கிரிஸ்டில்' என்ற கேபிள் நிறுவனத்தை, ஆபரேட்டர்கள் சிலர் துவக்கியுள்ளனர். "செட் டாப் பெட்டிகளை, ஓரிரு வாரங்களில் கொடுக்கத் துவங்கி விடுவோம்' என, அவர்கள் கூறுகின்றனர்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள, "கிரிஸ்டில்' கேபிள் ஆபரேட்டர்கள் கூறுகையில், "அரசு கேபிள் நிறுவனம் விரைந்து செயல்படவில்லை. செயல்படும் எங்களையாவது ஆதரிக்க வேண்டும். ஒரு நிறுவன ஆதிக்கத்தை ஒழிக்க, அரசுகேபிள் துணையாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது' என, கூறுகின்றனர்.

அரசு கேபிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் இல்லாத நிலையில், சுமங்கலி கேபிள் நிறுவனத்தினர், எந்த தடையும் இன்றி, இயங்குகின்றனர். கேபிள் ஆபரேட்டர்கள், சுமங்கலி செட் டாப் பெட்டிகளை வழங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அம்பத்தூர் பகுதியில், கேபிள் ஒயர்களை அறுத்துவிட்டு, 1,150 ரூபாய் கொடுத்து, சுமங்கலி செட் டாப் பெட்டிகளை தான் வாங்க வேண்டும் என, கட்டாயப்படுத்துவதாக, பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். இதைத் தடுக்க, அரசு கேபிள்

செயல்பாட்டுக்கு வர வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.அரசு கேபிள் மீது நம்பிக்கை ஏற்படவில்லை என, மாவட்ட நுகர்வோர் தகவல் மையம் கூறுகிறது. இதுகுறித்து, மையத்தின் ஒருங்கிணைப்பாளர் சடகோபன் கூறியதாவது:அரசு கேபிளின் எல்லை எதுவென்றே தெரியவில்லை. சென்னை மாநகராட்சிக்கு மட்டுமா; மாநிலம் முழுவதுமா என்பதை இதுவரை நிர்ணயம் செய்யவில்லை. அரசு கேபிள் இணைப்பு தருகிறேன் என வருபவர்கள், அரசு கேபிள் நிறுவனத்தின் பிரதிநிதியா என்பதற்கு எவ்வித அடையாளமும் இல்லை. அவரை நம்பி பணம் கொடுக்க, மக்கள் தயங்குகின்றனர்.

ஒரு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசுகேபிள் இணைப்பு தருகிறோம் என்கின்றனர். யாரை நம்புவது எனத் தெரியவில்லை. இணைப்பு பெற, 500 ரூபாய். மாத கட்டணம், 70 ரூபாய் என அரசு அறிவித்துள்ளது. ஆனால், 1,000 ரூபாய் முன் பணமும், 100 ரூபாய் கட்டணமும் கேட்கின்றனர். இதுதவிர, ரேஷன் அட்டையின் நகலை கேட்கின்றனர்.

ரேஷன் அட்டை இல்லாதவர்கள், அரசு கேபிள் இணைப்பை பெற முடியாதா என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், டி.டி.எச்., சேவைக்கு சென்று விடலாம் என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.இவ்வாறு சடகோபன் கூறினார்.

இதற்கிடையே, கேபிள் ஆப்ரேட்டர்கள் தொடர்ந்த வழக்கில், கடைசி தேதியை, நவ., 5 வரை நீட்டித்து, சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது. கோர்ட் அனுமதி அளித்துள்ள தேதிக்குள் கூட, கேபிள்களை டிஜிட்டல் மயமாக்க முடியாத நிலையே உள்ளது.- நமது சிறப்பு நிருபர் -

:wall:wall:wall:wall
==

execlusive news | அரசு கேபிள் நிறுவனத்தின் ஆமை வேக பணிகள் Dinamalar

==

Nice slam for the Arasu cable. But still they will continue to sleep as usual.
 
Back
Top Bottom
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock